திரௌபதி

திரௌபதி திரைப்படம்

தமிழனுக்கு திரௌபதி தலைநிமிர்வா?
இல்லை சாதிய சீர்கேடா?
ஏதேதோ எழுத்துரைத்து சாதிகளை சாடியவன்
எனக்கு கேட்கப்பட்ட கேள்வி இது

பதிவிட தயக்கமில்லை எனக்கு
ஆனால் பதிவின் முடிவு
எனது சாதியை தெரிவிக்குமெனில்
அதுவே எனது இழுக்கு

அன்று

ஆண்ட சாதியை
அடித்து தோலுரித்து தொங்கவிட்டார்
அன்பு சகோ மாரி செல்வராஜ்
ஏற்றுக்கொண்டனர் எல்லோரும்
இப்படியெல்லாம் நாட்டில் நடந்த நிகழ்வை
பார்க்காதவருக்கும் பதிவு செய்யப்பட்டது அழகாய்
ஒரு சில கலவரம் ஆங்காங்கே தென்பட்டது
ஒரு சில மனிதர்களால் சிலர் மனமும் புண்பட்டது

இதுபோலொரு சாதியம் தோலுரிக்கும் படத்தை ஏற்றுக்கொள்பவருக்கு படத்தின் நிறையும்
எதிர்த்து நிற்பவர்களுக்கு படத்தின் குறையும்
பூதக்கண்ணாடி வழி காண்பதுபோல தெரியும்

நான் ஏற்றுக்கொண்டேன்
பரியேறும் பெருமாளின் நிறைகளை
மனதிற்குள்ளே மறைத்து
புதைத்தேன் குறைகளை
எனக்கு பூதக்கண்ணாடி தேவைப்படவில்லை

இன்று

நாடக காதலை
நசுக்கியெறிந்துவிட்டார் நண்பர் மோகன்
ஏற்றுக்கொள்கின்றனர் பெரும்பான்மை
எதிர்த்து நிற்கின்றனர் சிறிதளவு

அன்றும் அதே நிறை குறை கண்ணோட்டம்
இன்றும் அதே

அன்றும் பூதக்கண்ணாடி பிடித்தனர்
இன்றும் அதே

நான் ஏற்றுக்கொண்டேன்
திரௌபதியின் நிறைகளை
மனதிற்குள்ளே மறைத்து
புதைக்கிறேன் குறைகளை
எனக்கு பூதக்கண்ணாடி தேவைப்படவில்லை

இரண்டு சாதிய திரைப்படங்கள்
இரண்டு சவாலான இயக்குனர்கள்
இயக்குனரின் சாதியம் கலந்த கதைக்களம்
இது என்ன உரைக்கிறது?

ரோஜா பூவைப்போல மென்மையான
சமுதாய கருத்து மூன்றில் இருபங்கு
ரோஜாவிலிருக்கும் முள்ளைப்போல
சாதி வெறி தூண்டல் மீதம் ஒரு பங்கு

நான் பூவை மட்டும் பறித்துக்கொள்கிறேன்
முள்ளை விடுத்து

நண்பர்களே நீங்களும்

-மன்னை சுரேஷ்

எழுதியவர் : (29-Feb-20, 3:37 pm)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
பார்வை : 98

மேலே