காதலனின் காதல்

சகியே....
சந்தனம் மணக்கும்-இந்த
சுபமுகூர்த்த நாளில்
சத்தியம் தவறாமல்
சம்மதம் கூறு-நீ
சமஞ்சதை எண்ணி
சொர்பணம் நூறு
சஞ்சல மனதுடன்
சந்தம் பாட வந்தேன்
சப்தம் கேட்டு-உன்
சகோதரி வந்தாள்
சுற்றம் அழைத்து
சாட்டையடி தந்தாள்
சட்டுனு மறைத்தால்
சங்கத்தில் பிடிபடுவேன்
சுமூகமாய் சொன்னால்
சுகமாய் முடியும்.........

எழுதியவர் : சரவணன் சா உ (29-Feb-20, 11:47 pm)
சேர்த்தது : சரவணன் சா உ
Tanglish : kadhalanin kaadhal
பார்வை : 96

மேலே