வாசகனாய் வாசித்த நாவல்

வாசகனாய் வாசித்த நாவல்

இது 268 பக்கங்கள் கொண்ட நாவல். புரொபசர் பால்பீர் “ஆபரேசன் ப்ளூ ஸ்டார்” என்னும் தாகுதலுக்கு பிறகு தனது சொந்த நகரமான அமிர்தசரசுக்கு வருகிறார். அங்கு அவர் சந்திக்கும் இன்னல்களை சொல்வது போல் இருக்கும். சொந்த ஊர் மக்களே அவரை அந்நியமாய் பார்ப்பதையும், பொற்கோயில் சிதைந்து கிடப்பதை பார்த்து மனம் வெதும்பி சொல்வது போல இருக்கும். நான் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து கொடுத்துள்ளேன். இடையில் “பிரதமர் இந்திரா காந்தியின் மரணமும்” அதனால் அவர்களுக்கு மீண்டும் ஏற்பட்ட பாதிப்பும் இதில் வரும். ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கும். ஆனால் இலக்கியமாய் நாம் இந்த நாவலை வாசித்தால் நன்றாக இருக்கும். தமிழில் மொழிபெயர்த்திருந்த மா.இராமலிங்கம் அவர்கள் சிறப்பாய் செய்திருக்கிறார்.


மூலம் பஞ்சாபி கதை “குவாச்சே அர்த்” ஆங்கில மொழிபெயர்ப்பு நிரஞ்சன் தஸ்நீம், தமிழில் மா.இராமலிங்கம் (எழில் முதல்வன்) சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற நாவல்

“எண்பதுகளில் பஞ்சாபில் ஏற்பட்ட நெருக்கடியான காலகட்டத்தை பின்னனியாக கொண்டது. இழந்து போன வாழ்வின் பொருண்மையை தேடியலையும் பயணத்தை சித்தரிப்பது. அரசியல் சார்ந்த திட்டமிட்ட நடவடிக்கைகளுக்குமிடையே சிக்கிக்கொண்டு மீண்டு வரமுடியாமல் தவிக்கும் ஒற்றை ஆளாக புரொபசர் பால்பீர் இருக்கிறார்

பாகிஸ்தான் பிரிவினைக்கு முன் ‘ஒரு நாள் ஒரு சில போக்கிரிகள் சணல் துண்டுகளை மண்ணெண்யில் பற்ற வைத்து அத்தெருவில் முஸ்லீம் மக்கள் வசித்து வந்த பக்கத்தில் வீசினார்கள். அதனால் அங்கு கூச்சலும் வன்முறையும் வெடித்தது. ஒரு முஸ்லீம் மாஜிஸ்ட்ரேட் சில கூர்க்கா சோல்ஜர்களோடு அந்த இடத்துக்கு விரைந்து வந்து அந்த இடத்தை சுற்றி வளைத்து உள்ளே இருக்கும் ஆண்களை இழுத்து வரச்செய்தார். அன்று இரவு நாங்கள் முப்பத்தி இரண்டு பேரும் கொத்தவால் என்று சொல்லப்படும் இருட்டறையில் அடைக்கப்பட்டோம்.

இப்போது 1985 செப்டம்பர் மாதம்

ஊரடங்கு உத்தரவு போடப்போகிறார்கள் என்று தெரிந்து நான் கடையிலிருந்து நேராக வீட்டுக்கு வந்து விட்டேன் என்றார் குல்பீர்சிங்.
இங்கே வருவது கஷ்டம் என்று தோன்றியதால் நான் என் வீட்டிற்கு போய்விடலாமா என்று நினைத்தேன்
பால்பிரீஜி நீங்கள் இங்கு வந்ததுதான் சரி
உண்மையில் இப்போது இந்த நகரமே எனக்கு அந்நியமாய் படுகிறது
ஏன் அப்படி சொல்கிறீர்கள் பால்ப்ரீஜி, நீங்கள் இங்குதான் பிறந்து வளர்ந்தீர்கள் இந்த தெருக்களும் கடைத்தெருவும் உங்களுக்கு எப்படி அந்நியமாய் தெரியும் ?
என் தெருவிற்க்கு போகும்போது என்னை அயலானாகவே பார்க்கிறார்கள்.நட்புடன் பழகியவர்கள் விரோதியாக பார்க்கிறார்கள்.
நீங்கள் சொல்வது சரி, காலம் ஒரு போதும் ஸ்தம்பித்து நின்று விடுவதில்லை.ஆனால் நம் மனதில் படியும் எண்ணங்கள் மாறமால் அல்லவா படிந்து விடுகிறது.
வேறு ஏதாவது புதுசா நாவல் எழுதியிருக்கிறீர்களா? எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன் எழுதி என்ன பயன் பாவுஜி.
எழுத்தாளன் என்பவன் எப்போதும் எழுதிக்கொண்டேதான் இருக்கணும். ஒரு போதும் எழுதுவதை நிறுத்த கூடாது.
எழுத்தாளன் வாசகனுக்காகத்தான் எழுதுகிறான். விமர்சகனுக்காக அல்ல.
ஆனால் இப்பொழுது நாவலாசிரியர்கள் விமரிசகர்களாக மாறி தங்கள் கருத்துக்களை படைப்பில் நுழைக்கிறார்கள்.

மணி ஒன்பதரை இருக்கலாம். குல்பீர் தன் வீட்டிலே தங்கும்படி வற்புறுத்துகிறார். நான் எப்படியும் வீட்டுக்கு போய் விடவேண்டும் என்று நினைத்தேன். ரிக்க்ஷாவை கூப்பிட்டு வாடகை பேசி வீட்டை நோக்கி போனேன். சாலைகள் வெறிச்சோடி கிடந்தது. அச்சமும் நடுக்கமும் தெரிந்த சூழல் அது. ரிக்க்ஷா மித வேகத்தில் போயிற்று. ரிக்க்ஷாக்காரன் ஒரு இந்துவா, முஸ்லீமா எனக்கு தெரியாது. ஒன்று மட்டும் தெரியும் அவன் நிச்சயமாக ஒரு ஏழை. எல்லா ஏழைகளுக்கும் உரிய மதம் எது தெரியுமா? அதுதான் வறுமை.

இந்த இடத்தில் எதுவும் நடக்கலாம். யாரும் என்னை நீ யார் என்று கேட்கப்போவதில்லை. நான் அணிந்திருக்கும் தலைப்பாகையே நான் யார் என்பதை அடையாளம் காட்டி விடும். வழியில் துர்க்கை அம்மன் திருக்கோயிலை பார்த்தேன். கடந்த காலத்தில் அதனை சீதளாதேவி அம்மன் கோயில் என்றுதான் சொல்வோம். வீட்டில் யாருக்காவது அம்மை நோய் வார்க்குமானால் அக்கோயிலில் இருந்து புனித தீர்த்தம் வாங்கி வருவோம் குழந்தையின் வாயில் ஊறி அது படுத்திருக்கும் இடத்தை சுற்றி ஊற்றுவோம்.அக்கோயில் வழியாக இப்பொழுது போகும்போது யாரோ ஒரு மதவெறியன் ரிக்க்ஷாவிலிருந்து என்னை பிடித்து தள்ளலாம். பயத்துடனே அந்த இடத்தை கடந்தேன்.

காலையில் தயாஜியின் வீட்டிற்கு போய் தேநீர் அருந்தலாம் என்று முடிவு செய்தேன். அவர் ஒரு கவிஞர் தனிமையில் இனிமை காண்பவர்.

“நாம் தனிமையில் இருக்கும்போதுதான் ஆயிரக்கணக்கான
நினைவுகளோடு அதன் நடுவே வாழ்கிறோம்.

மறு நாள் காலைப்பொழுது தாரா சாஹிப் இப்போது வெறும் கற்குவியலாக இருந்தது. அகால்தத் கட்டிடம் தூள் தூளாக நொறுங்கி கிடந்தது. ஹர்மந்தர் சாஹிப்பின் முன் பக்கத்தில் ஒரு அறை அங்கேதான் குருகிரந்த சாஹிப் புனிதமான பட்டுத்துணியால் போர்த்தப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்ப்டிருந்தது. அறையின் சுவர்கள் குண்டுகளால் துளைக்கப்பட்டு கோரமாக காட்சியளித்தது. குளத்தின் புனித தீர்த்தம் மாசுபட்டிருந்தது.

நான் காந்தகார் பகுதியில் இருந்து வெளியே வந்தேன். என் பழைய நண்பர்கள் மல்ஹோத்ராவும், வர்மாவும் எதிர்புறமிருந்து வந்து கொண்டிருந்தார்கள்.
நான் திடீரென பதட்டம் அடைந்தேன். உங்கள் அரசாங்கம் செய்திருக்கிற செயலை பார்த்தீர்களா?
உங்கள் அரசாங்கம் என்று ஏன் சொல்கிறீர்கள்? அது எந்த அளவுக்கு எங்களுடையதோ அதே அளவு உங்களுக்கும் உரியதாயிற்றே..மல்ஹோத்ரா
இப்போது அது உங்கள் அரசு, எங்களுடையதல்ல, நான் வசைபாடும் நோக்கில் பேசினேன்.
நீங்கள் இந்த அரசாங்கத்தை பற்றியே திரும்ப திரும்ப சிந்திக்கிறீர்கள். நாம் எந்த அரசுடனாவது ஒத்து போயிருக்கிறோமா? வர்மா கோபத்தோடு கேட்டார்.

அப்படி நடந்தது வேறொரு சமயம். அப்போது ஆங்கிலேயர்கள் நம் நாட்டை ஆண்டு வந்தார்கள். எங்கு பார்த்தாலும் சுரண்டல், கொடுகோல் ஆட்சி, அடக்கு முறை, வன்முறை செயல்கள். இப்போதிருப்பது நம் சொந்த அரசு.நாம் தேர்ந்தெடுத்த அரசு. அவர்கள் ஏன் இப்படி அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டார்கள்.

சரி பால்பீர் இன்னொரு உண்மையை மறந்து விடாதீர்கள். ஆள்வோர்க்கும், ஆளப்படுவோர்க்கும் இடையே எப்போதுமே ஒரு இடைவெளி உண்டு. ஆள்கிறவர்கள் வேறொரு கோணத்தில் சிந்திக்கிறார்கள். ஆளப்படுகிறவர்களின் மனோபாவம் வேறாக இருக்கிறது.

என் கருத்தை உங்களால் புரிந்து கொள்ள முடியாது இத்தாக்குதல் உங்கள் மீது அல்ல, எங்கள் மீது. நான் இப்படியும் சொல்வேன் இத்தாக்குதல் நடந்த்தே உங்களுடைய தூண்டுதலால்தான்
நான் சொல்வதை கவனமாக கேளுங்கள் பால்பீர் 1951 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தபோது என்னுடைய தாய்மொழி என்று எதை சொன்னேன் தெரியுமா? இது உங்க இரண்டு பேரை பற்றிய விஷயம் அல்ல, பஞ்சாபில் வசிக்கும் இரு வேறு சமூகங்கள் சம்பந்தப்பட்டது. அவர்கள் அதே பழைய காழ்ப்புணர்ச்சியை இன்றும் நீருற்றி வளர்த்து வருகிறார்கள். துவேஷத்துக்கு இடம் தருகிறார்கள்.

நான் நடக்க ஆரம்பித்தேன். மல்ஹோத்ரா என் கையை பற்றி இழுத்து தயவு செய்து கொஞ்சம் நில்லுங்கள் நாங்களும் உங்களுடன் வருகிறோம்.
சத்நாம் சிங்க் கேட்டார் நீங்கள் தேநீர் அருந்தலாம் அல்லவா?
வேண்டாம் ஒன்றும் வேண்டாம்
அவருக்கு குளிர்பானம் ஏதாவது கொடுங்கள் கொதித்து போயிருக்கிறார்.
குளிர்பானம்தானே வரவழைக்கிறேன்.

வெளியே நடந்து வந்தார்கள்.
ஏ சீக்கிய பசங்களா..யாரோ ஒருவன் ஊளையிடுவது போல உரக்க கத்தினான். அவன் முடிச்சு போட்டிருக்கானே முன் கொண்டை அதை பிடிச்சு இழுத்து அவனை கீழே தள்ளுங்கடா..
மல்ஹோத்ரா சட்டென்று கத்தியவனின் சட்டையை கொத்தாக பிடித்து அவர் யாரென்று உங்களுக்க்கு தெரியாதா? சொல்..கர்ஜித்தார்.
நான் இப்ப என்ன சொல்லிட்டேன் அமுங்கிய குரலில் பிடிபட்டவன் கேட்டான்
நீ இப்ப சொன்னியே அதை சொல்..வர்மா கோபத்தின் உச்சியில் நின்றார்.
லாஜி நானும் பால்பீரும் இந்து கல்லூரியில் நான்கு ஆண்டுகள் ஒன்றாக படித்தோம். சீதளா தேவி கோயிலுக்கு அருகிலுள்ள மைதானத்தில் ஷக்காவுக்கு இரண்டு பேரும் போயிருக்கிறோம்.
அப்புறம் ஏன் வழி மறிச்சே.? ஒரு பெரியவர் முன் வந்து நீங்க விடுங்க ஜீ அவர் மேலே கையை வச்சாங்காங்கன்னா பாத்துக்கறோம்.
கை வைக்கறது இருக்கட்டும் அதை நான் பாத்துக்கறேன்.
ஒரு ஆள் முன் வந்து உங்களுக்கு தெரியாததா? தீவிரவாதிகள் குருத்வாராவில் தங்கியிருக்கறாங்க.
நிறுத்துங்க மல்ஹோத்ரா கூச்சலிட்டார் இந்த குருத்வாராவில் பாய் ஷாஹிபும், அவரது குடும்பமும் தான் வசிக்குது. இன்று குரு பூர்ணிமாவுக்கு அங்கே கூட்டு வழிபாடு நடக்குது. அவங்களுக்கு உணவு தயாரிக்கறாங்க. நீங்க முட்டாள்தனமா நடந்துக்கறீங்க
இந்த சீக்கியர்கள் நேத்து சோப்ரா ஷாஜியை போட்டு தள்ளிட்டாங்க
எவன் வெட்டி தள்ளினானோ அவனை தேடி பிடியுங்க, அதை விட்டுட்டு ஒரு பாவமும் அறியாத வழிப்போக்கர்களை துன்புறுத்தறீங்க இடி போன்ற குரலில் முழங்கினார் வர்மா.

அதற்குள் ஒருவன் வர இவர்கள் என்னை தள்ளிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தனர்.
மல்ஹோத்ரா என்னை விடவில்லை. இந்நேரத்தில் நீங்கள் தனியாக போகவேண்டாம். என் வீட்டிற்கு வாருங்கள், அங்கேயே சாப்பிடலாம். பிறகு நான் என் கவிதையை வாசித்து காட்டுகிறேன்.
மூவரும் போஜனம் முடித்த பின் மல்ஹோத்ரா தன் கவிதையை வாசித்தார்.

உலகப் பேரழகோடு ஒளிரும்
இந்த அமிர்தசஸ்
என் பஞ்சாப்பின் மாநகரம்
தியாகிகளின் குருதிப்புனல் பாய்ந்த இம் மண்
சுதந்திர வாயிலை திறந்துவிட்டுள்ளது
சொர்க்க பூமியாக இருந்த இது
யாருடைய கொள்ளிக் கண் பட்டோ
இப்படியாயிற்று
குருதேவின் வாழ்விடமான இதன் அழகை
யாரும் அழிக்க முடியாது
இது பாரத அன்னையின் திலகம்
அன்னையின் திலகத்தை அழிப்பார் உளரோ?

கீழே கடை தெருவில் சத்தம் எட்டிப்பார்க்க சோப்ரா சாஹிப்பின் உடல் எடுத்து செல்லப்படுகிறது.
நான் என் வீட்டுக்கு போக முடியுமா?
இப்ப வேண்டாம் ஆட்கள் கூட்டமா இருக்கறாங்க
இந்த கூட்டத்துல நம்ம தெரு ஆட்கள் யாருமில்லையே?
அவர்கள் வெளியாட்கள், ஏதேனும் நடக்கலாம், உன் தெருவில் இருப்பது இரண்டே சீக்கிய குடும்பங்கள்தான் ஒன்று தயாஜி, இன்னொன்று நீ மல்ஹோத்ரா சொன்னார்
தயாஜி ஜலந்தருக்கு போயிட்டார், நான் மட்டும்
உன்னை அவர்கள் கை வைக்கமுடியுமா? வர்மாவும் மல்ஹோத்ராவும் உறுமினார்கள்.

வீட்டிற்கு வந்தபின் என் மனம் அலைக்கழிக்கப்பட்டது “இந்து சீக்கியர் ஒற்றுமை ஓங்குக” என்று யாராவது கோஷங்கள் எழுப்பும்போது சிரிப்புத்தான் வருகிறது. இதெல்லாம் யாருக்காக? நிஜமாக இருக்குமானால் செயற்கையான கோஷங்கள் எதற்காக? யாரை ஏமாற்ற? தவறு செய்கிறவர்கள் இரு சமுகத்தாரிடையே இருக்கிறார்கள் அவர்கள் வேண்டுமென்றே பிளவை உண்டாக்க முயல்கிறார்கள். இரு சமூகத்தாரும் ஒரே மரத்தின் இரு கிளைகளல்லவா? மக்களிடையே ஒற்றுமையையும் பரஸ்பர நம்பிக்கையையும் உருவாக்குகிறோம் என்று சொல்லிக்கொள்பவர்கள் மக்களின் கவனத்தை திசை திருப்பி விட்டு விட்டு உண்மையான பிரச்சினையை விட்டு விடுகிறார்கள். தங்களது சுய லாபத்துக்குத்தான் இவர்கள் செயல்படுகிறார்கள்

திடீரென்று ஒரு பீதி என் மனதில் பற்றிக்கொண்டது. ஒரு காலத்தில் முற்போக்கு எழுத்தாளர்களாகிய நாங்கள் இந்து-முஸ்லீம் என்னும் பேதத்திற்கு இடம் தராதவர்களாகவே இருந்தோம். இந்த பேதங்கள் ஏன்? எதற்காக? என்றே நினைத்தோம்.ஆனால் காலம் விட்டு விடவில்லை. கடைசியில் தேச பிரிவினையில் கொண்டு போய் விட்டு விட்டது.

தர்பார் சாஹி இருந்த திசையிலிருந்து கீர்த்தனை பாடல்களின் மெல்லிய இசை காற்றில் தவழ்ந்து வந்தது. சீதளா தேவி கோயிலிருந்து ஆரத்தி நடக்கும்போது ஒலிக்கப்படும் வாத்திய இசை தெளிவாக கேட்ட்து. மசூதியிலிருந்து நகராவின் ஒலி தெளிவாக கேட்ட காலம், இவையெல்லாம் இன்று கனவானதோ?

அப்பொழுது நமாஸ் செய்வது பற்றி அல்லாமா இக்பால் கொஞ்சம் வேடிக்கையாய் பாடியிருக்கிறார்.
மசூதி பக்தகோடிகளால் ஒரே இரவில்
கட்டப்பட்டு விட்ட்து
பழைய பாவியாகிய என்னை என் மனம்
இத்தனை வருடங்களாகியும் தொழுகை புரிவோனாய்
மாற்றவில்லையே !

அத்தோடு இக்கவிஞர் இதே விஷயத்தை வேறொரு வகையிலும் பாடியிருக்கிறார்

நான் எப்பொதெல்லாம் தொழுகைக்காக
மண்டியிடுகிறேனோ
அப்போதெல்லாம் பூமியிலிருந்து ஒரு குரல்
ஒலிக்கிறது
உன் இதயம்தான் ஆரணங்குகளின் நினைவால்
ஆட்கொள்ளப்பட்டு விட்டனவே
நமாஸ் செய்து என்ன ஆதாயத்தை
எய்தப்போகிறாய்?

தயாஜி என் அருகில் வந்தார் குறும்பா ஒன்று சொல்கிறேன் கேட்கிறாயா?
என் பழைய முகத்தைத் திரும்பவும்
எனக்கு காட்டவேண்டும்
என்பதன்றி
இந்த கண்ணாடியிடமிருந்து நான் பெரிதாய்
எதை எதிர்பார்க்கிறேன்
அடுத்த குறும்பா
வழி படர்ந்த பேரிருளோ மைவண்ணம் பெறுகிறது
இதயமெனும் நெருப்பினின்று சுடர்கொழுந்து
தோன்றாதோ?

நீங்கள் சிறை வாசம் அனுபவித்தீர்களா தயாஜி
இல்லை அது போன்ற நினலை அனுபவித்தேன். அதை பற்று “லாகூரில் இருந்த் ‘கேசர் “என்னும் இதழில் வெளி வந்த எனது கவிதை

அண்ணல் காந்தி ஆசாத் இருவரும்
அடைக்கப் பட்டனர் ஜெயிலிலே
ஒவ்வா இதயமே எமையும் அங்கே
உடனே அழைத்துப் போய்விடு
எங்கள் தலைவர் எல்லாரும் அங்கே
ஏகினர் ஜெயிலின் அறைகளோ
புதிய உலகம் போலாயிற்று
பொலிக!பொலிக! சிறைச்சாலையே

அடுத்து நம் பஞ்சாப்பை பற்றி இன்னொரு கவிதை
முடியையும் நாபாவின் அரியணையையும்
அவன் இழந்து நிற்கிறான்
அதனாலென்ன?
நாபாவை ஆண்டவன், நாட்டாரின் இதயத்தில்
இடம் பெற்றுள்ளான்.
பாஞ்சாலத்துக்காக பல வீரர்கள் மடிந்தார்கள்
அவர்கள் வீர மரணத்துக்கு
மக்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள்

“ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தபோது
வெளிவந்த கவிதை நான்கு வரிகள் மட்டுமே ஞாபகம் என்றார் தயாஜி.
அதை பாடுங்கள் நான் சொன்னேன்
நாங்கள் தேசபக்த ரன்றி
துரோகர் அல்லர் உணருவீர்
ஸ்வர்க்கம் பெறினும் சொந்த நாட்டை
விற்க அணியம் ஆவமோ?
அற்புதமான வரிகள் அந்த காலத்தில் சின்ன வயதில் எப்படி உங்களால் அமைக்க முடிந்த்து
அப் பாட்டு ஒவ்வொருவரின் வாயிலும் நிழைந்து வெளிவந்தது என்பது நிஜம்.

ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டு விட்டது. நான் புறப்பட்டு விட்டேன். தயாஜியிடம் விடைபெற்று கிளம்பினேன். கையில் ஒரு ப்ரீப்கேஸ் மட்டும்.மல்ஹோத்ரா எதிர்பட்டார். வாருங்கள் காலை உணவை எடுத்துக்கொள்ளலாம், வேண்டாம் நான் மொஹிந்தர் பாபா வீட்டிற்கு போகணும்.அங்கேயே பார்த்துக்கொள்கிறேன்.
அதெல்லாம் வேண்டாம் வாருங்கள் என்னோடு கையை பிடித்து அழைத்து சென்றார். அன்பின் அழைப்பு.
எனக்கு உருது கவிதை ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது. முதலில் உணவு, பிறகு கவிதை ஒரு கையில் பூரி உருளைக்கிழங்கு மசாலா இரண்டையும் டேபிளின் மேல் வைத்தார்.
அது சரி ஒரு முறை ஈத் விழாவிற்கு வரும்படி அழைத்தேனல்லவா, நீங்கள் ஏன் வரவில்லை? அந்த சமயத்தில் நான் இங்கே வந்து என்ன செய்யப்போகிறேன்?
ஈத் விழாவின்போது எங்கள் வீடு கோலாகலமாய் இருக்கும் தெரியுமா? நாங்கள் பீரான் பக்கீர் தர்க்காவிலும், எங்கள் வீட்டிலும் அவர் நினைவாக வியாழக்கிழமை தோறும் விளக்கேற்றி வழிபடுவோம்.
இது எல்லாம் எனக்கு முரணாக தோன்றுகிறது. நீங்கள் இந்து காத்ரியாக இருந்து கொண்டு ஈத் கொண்டாடுகிறீர்கள் அதுவும் பக்தி சிரத்தையோடு.
எங்கள் பையாஜி காலத்திலிருந்து இது நடைபெற்று வருகிறது. நாங்கள் பீர்களையும், பக்கீர்களையும் யாண்டும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனின் வடிவமாகவே காண்கிறோம். நான் பம்பாயில் இருக்கும்போது கூட இந்த விழாவிற்கு ஆஜராகிவிடுவேன். எனக்கு அவர்களின் ஆசிர்வாதம் எப்பொழுதும் உண்டு

பாலத்தின்மேல் ரயில் போய்க்கொண்டிருக்கிறது, ஒரு பக்கம் பதட்டமும் குழப்பமும், மற்றொரு பக்கம் அமைதி . பதட்டம் நிறைந்த மன நிலையில் மனிதன்.
அமைதி எங்கே? என்று தேடுகிறான்.
சர்தார்ஜி இது மாதிரியான துன்ப துயரங்களுக்கு என்றுதான் விடிவு ஏற்படும்? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்
நாம் எல்லோரும் முழு மனதோடு அதற்கான முயற்சியில் ஈடுபடவேண்டும்.
அதுதான் இல்லை. இருந்திருந்தால் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகாதே.
ரயில் பெட்டியில் மெளனம் நிலவிற்று.

ஒருவர் நீண்ட நேரம் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார்.
மன்னிக்கணும் தாங்கள் புரொபசர் பால்பீர்தானே?
ஆமாம் நீங்க?
சார் நான் உங்கள் பழைய மாணவன், உங்களுக்கு என்னை நினைவிருக்காது.பதினைந்து வருடங்களுக்கு முன்னே தாண்டா ஊர்மரில் அரசாங்க கல்லூரியில் படித்தேன்
ஓ அப்படியா உங்கள் பெயர்
சுபாஷ் சந்தர்.
எனக்கு சரியாக நினைவில்லை.
சார் எனக்கு ஆங்கிலம் சரியாக வராது, எனக்கும் இன்னும் பதினைந்து மாணவர்களுக்கும் நீங்கள் தனிப்பட்ட முறையில் ஸ்பெஷல் கோச்சிங்க் கொடுத்தீர்கள். ஆங்கிலத்தில் எனக்கிருந்த குறைபாட்டை போக்க முயற்சி எடுத்து கொண்டீர்கள்.
என்னை இப்போது எப்படி அடையாளம் கண்டு கொண்டீர்கள்?
அன்றைக்கு எப்படி பார்த்தேனோ, அப்படியேதான் சார் இருக்கிறீர்கள் ஒரே வித்தியாசம் உங்கள் எடை கூடியிருக்கிறது. முதலில் தயக்கமாய் இருந்த்து நீங்கள்தானோவென்று.
நீங்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்
சார் நான் பில்லாவூர் அரசு மேநிலைப்பள்ளியில் ஆங்கில விரிவுரையாளராக இருக்கிறேன்.
நீங்கள் படிக்கும் காலத்தில் ஆங்கிலம் வராது என்றீர்கள்
நான் எந்த பாடத்தை கஷ்டப்பட்டு படித்தேனோ அந்த பாடத்தை மற்றவர்களுக்கு போதிக்க வேண்டும் என்று ஆசை
உங்கள் முயற்சியில் வெற்றி கண்டீர்களா?
உங்கள் பாணியிலேயே வெற்றி கண்டேன்.
என் பாணி என்று எதை சொல்கிறீர்கள்?
மன்னிக்கனும் அதை முழுமையாக சொல்ல முடியாது. உங்கள் வாயிலிருந்து வந்த ஒவ்வொரு சொல்லும் எனக்கு மனப்பாடமாகி விட்ட்து நீங்கள் தாகூரின் பாடல் ஒன்றை திரும்ப திரும்ப உணர்வு பூர்வமாக இரசித்து சொல்வீர்கள் அது எனக்கு இப்பொழுதும் மனப்பாடமாய் பதிந்து விட்டது.
என்ன பாடல் அது?

“இச் சின்னஞ்சிறு மலர்களை
உடனே கொய்து விடுங்கள், தாமதம் வேண்டாம்,
இல்லையெனின், அவற்றின் மெல்லிதழ்கள்
வாடி வதங்கி மண்ணில் உதிர்ந்து போம்

சுபாஷ் இவையெல்லாம் மறந்து போய்விட்ட்து. இப்போது முன்பு போல் பேரார்வத்தோடு பாடம் நடத்துவது இல்லை. நான் முன்பு சொன்ன கருத்துக்கள் அர்த்தமற்றவை போல் தோன்றுகின்றன. மாணவர்கள் வழி தவறிப்போகும் அளவுக்கு கருத்துக்களை சொல்லியிருக்கிறேனோ என்று அஞ்சுகிறேன்.

நோ..நோ. அப்படி சொல்லாதீர்க்ள் சார் எங்கள் இதயத்தில் நீங்கள் ஏற்றி வைத்த புனித தீபம் இன்னும் சுடர் குன்றாமல் எங்களுக்குள்ளே எரிந்து கொண்டுதான் இருக்கின்றது.

நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம், ஆனால் நான் எவ்வ்ளவோ மாறியிருக்கிறேன்.

புரொபசர் உங்களால் மாறவே முடியாது. ஏதோ ஒரு மன்நிலையில் இப்படி பேசுகிறீர்கள். நீங்கள் எங்களை நேசித்தீர்கள். வழிகளை சரியாக காட்டினீர்கள் எங்களை கரம் பிடித்து அழைத்து போனீர்கள்

அப்பொழுது ஜன்னல் ஓரமாய் இருந்த ஒரு தென்னிந்திய பெண் மெல்லிய குரலில் இனிமையாக பாடினாள்

நீ இப்போது பாடினாயே அது என்ன மொழியம்மா? கேட்டேன்

அவள் “தமிழ்” என்றாள்

நீ பாடிய பாடல்களின் அடிகளை திரும்ப பாடுவாயா?
பாடுகிறேன் அவள் பாடினாள்

பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்
புன்மை இருட்கணம் போயின யாவும்…
பெண்ணே எனக்கு தமிழ் தெரியாது நீ பாடிய பாட்டின் பொருளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க முடியுமா?

“The day has dawned; our penances
have borne fruit;
And the bright golden rays seek
every where.”

இதை பாடியவர் தமிழ் மக்களால் தேசிய கவி என்று போற்றப்பட்ட சுப்பிரமனிய பாரதியார் பாட்டின் தலைப்பு “பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி”
சுபாஷ் அப்பெண் பேசியதை கேட்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய சுபாஷ் சந்தர்.

புரொபசர் அத்தமிழ் கவிஞரின் பாட்டில் வெளிப்படும் நம்பிக்கையை “தி டே ஹேஸ் டான்டு” ஆஹா அற்புதமான தொடர். மேலும் தொடர்ந்தார்
புரொபசர் நீங்கள் மனச்சோர்வோடு பேசினால் நான் என் தொழிலில் காட்டி வரும் அர்ப்பணம் பொருளற்றதாகி விடும். உங்களால் என் மனதில் உருவாக்கி வைத்திருந்த அந்த மாளிகை மண் மேடாய் சிதைந்து விடும்.என் குரல் நாண்களில் புதிய அதிர்வியக்கத்தை மீட்டி தாருங்கள்.

திடீரென என் உள்ளத்தில் சில தீக்குச்சிகள் எரிந்து ஓளிப்பொறிகளை சிந்தின.புதிய சிந்தனை, புதிய உணர்வு நிலை என் மனம் வானம் வரை விரிந்தது.

“ஒவ்வொரு ஆற்றுக்கும் பாலம் தேவைப்படுகிறது
அது போல ஒவ்வொரு பாலமும் ஒரு ஆற்றை தேடுகிறது
ஆறு இல்லையென்றால் பாலத்தின் இருப்புக்கு அர்த்தம் இல்லை
காலம் உள்ளவரை ஆறும் இருக்கும், பாலமும் இருக்கும்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (3-Mar-20, 12:30 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 199

மேலே