நீருடன் ஒரு நேர்காணல்

நீருடன் ஒரு நேர்காணல்
கனவொன்று கண்டேன்,நான்
கனவில் தான் கண்டேன்!
நீல நிற வண்ணமாய்
ஆடையணிந்து
வந்தால் ஒருத்தி.,
யாரென்று கேட்டேன்
‘நீர்' என்று சொன்னாள்…
நீயா!!!என வியந்தேன்
ஏனென்று கேட்டாள்.,
நானும் கேட்டேன்
அதே கேள்வியை..
நிசப்தமாக நின்றாள்
நிஜங்களையும் சொன்னாள்.,
உன்னையே எண்ணி
நாளெல்லாம் யாமிருக்க
பழிவாங்க நினைக்கும்
உமக்கு, நாங்களென்ன
செய்தோம்?என்று கேட்டேன்
என்ன செய்யவில்லை
என்று சினந்தாள்
ஒவ்வொன்றையும் சொன்னாள் …

அளவற்ற வண்ணம்
பாய்ந்து விளங்கிய என்னைக்
கருவேள மரங்களைக் கொண்டு
கற்பழிக்கச் செய்தீர்கள்.,
அலைகள் இல்லாத ,அழகிய
கடலாக இருந்த என்னைப்
பாம்பன் பாலத்தால்
பாழாக்கியதும் நீரே.,
குன்றிருக்கும் இடமெல்லாம்
குளிர்ச்சியாய் நான் விளங்க
குப்பைகளால் என்னை
அசுத்தம் செய்தீர்கள்.,
விலங்கினங்கள் நானின்றி
தவிதவித்துப் போனது
உங்கள் குதூகலத்திற்கு
நீரமைத்த குற்றாலத்தால்.,
காட்டிற்கும் வீட்டிற்கும்
கதவொன்று வைத்தீர்கள்
அதையும் நீரே
உடைத்து எறிந்தீர்கள்…
மெல்ல பெய்தாலும்
மெனக் கெட்டோம் என்றீர்கள்,
சீரிப் பாய்ந்தாலும்
சீரழித்தேன் என்றீர்கள்…
சுட்டெரிக்கும் சூரியனை
அணைக்க நான்
வருவேனாம்,
சுயநலமாய் நீங்கள்
சாபம் விடுவீராம்..
இருந்தாலும் அருமைப் புரியாது
இல்லாமற் போனாலும்
தவறை உணராது
அது தானே நும்மினம் ..,என்று
மூச்சிரைத்தாள் நீரானவள்.,
உனக்குக் கொடுக்க
நீரில்லையே என்றேன்
உன்னிடம் கையேந்தி
வரவில்லை நானென்றாள்…
ஏனிந்த கோபம் என்றேன்.,
என்று தான் நும் தவரை
உணர்வீர்கள் என்றாள்…
நிசப்தமாய் நின்றேன்
அப்பட்டமாய்க் கேட்டாள்,
உங்கள் விருப்பத்தின் போது
என்னை அழைப்பீர்கள்
தேவை முடிந்துவிட்டால்
விரட்டி அடிப்பீர்கள்,
நானென்ன விலைமகளா
உங்களுக்கு?
என்றாள்..
பதிலளிக்க பயந்து
கண்விழித்துக் கொண்டேன்…

எழுதியவர் : பிரியதர்ஷினி (5-Mar-20, 10:09 am)
பார்வை : 104

மேலே