கொரோனா வைரஸ்

கொரோனோ வைரஸ்

வுஹானில்(wuhan) உருவான நஞ்சு
உலகத்தை உலுக்கும் பிசாசு
உயிர்வதை செய்யும்போது தெரிவதெல்லாம் காசு
பாவத்தின் சம்பளத்தால் திணறுகிறது மூச்சு
உயிர்களை உண்ணும் போது கல் மனசு
உயர்ந்த மனிதா! உனக்கு இயற்கை தந்த பரிசு


பட்டுக்கு பெயரெடுத்த சீனா
படாத பாட்டுக்கு பெயர்போன சீனா
சுவாசிக்கும் அனைத்தையும் உண்ணும் சீனா
சுவாசிக்க முடியாமல் தவிக்கிறாயே சீனா
கண்ணில் பட்ட உயிரையெல்லாம் உணவாக பார்த்தாய் சீனா
கண்ணில் படாத நுண்ணுயிர் உன் உயிரை பதம் பார்க்கிறதே சீனா

போகத்தின் வழியை நாடும் சீனா, இனி
போகர் வழியை நாடு,
இம்சையை விடு , அஹிம்சையை எடு
பட்டுப்பாதையை காட்டிய சீனா, இனி
பாசப்பாதையை காட்டு
சைவத்தை நிலைநாட்டு
இனி சீனர்கள் சைவர்கள் ஆகட்டும்
அன்பே சிவம்
அரவணைக்கட்டும் மனம்

எழுதியவர் : வெங்கட்ராம் (5-Mar-20, 12:25 pm)
சேர்த்தது : Venkatram
பார்வை : 544

மேலே