பிரிவு

நான் நம்பிவிட்டதாய் நீ நினைத்துக்கொள்ளும்படி

பொய்யென்று தெரிந்தும் தெரியாதது போல் நீ சொல்லும் பொய்களை ரசித்தேன்

நான் நம்பமுடியாத உண்மை
என்னை நீ மறந்துபோனது

பொய்யாக வேண்டுமென்று இப்பொழுதும்
நினைப்பேன் நீ இல்லாத
உண்மையை சகியாது

எழுதியவர் : நா.சேகர் (6-Mar-20, 8:11 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : pirivu
பார்வை : 1351

மேலே