முதுமையிலும் புதையாத காதல்❤-----இஷான்
பொழுதும் சாஞ்சி போவுது
இந்த கிழட்டு கிழவன
இன்னும் காணுமே ஆத்தா...
கொழுந்து வெத்தலயும்
ஏன் விரலோட மடிச்சி வச்சிருக்கன்
அவன் வாயதேடிதான்
வாசலோரம் காத்துகிடக்கன்....
அட நான் ஒரு அசடு
யார்கிட்ட கைமாத்த (கடன்)
போனானோ ஏன் மகராசா!
ஒரு நாளும் ஏன் வயித்த
பட்டினி போட்டுடமாட்டான்...
வீரப்போட என்ன ஒத்தயா
தள்ளிகிட்டு வந்தான்
நான் கூட பயந்தன்
இந்த பட்டுமேனி கசங்கின பொறவும்
அவன் பாசத்துக்கு ஒன்னும்
பஞ்சம் வரல ஆத்தா....
அவன் சட்ட ஆயிரம்
ஓட்ட காட்டும்
ஆனா பாறேன் இப்ப
புது பொடவ ஒன்னோட வருவான் ...
சேட்ட பன்னுவான்
பதினாறு வயசு பைய்யனும்
தோத்துபுடுவான்னா பாறேன்...
கிழட்டு கிழவனுக்கு
பதினாறு என்னு மனசுல நினப்பு....
சில சமயம் கோபத்த
முகத்துலயே காட்டிபுடுவான்
பொறவு ஏன் முந்தானையோடயே
முடிச்சி போட்டு திரிவான்
கிறுக்கு கிழவன்...
கிழவன மடியோடயே இந்த
கட்ட போய் சேந்துடனும்
இல்லன்னா கிழவன
கூட்டிட்டாவது போயிடனும் ஆத்தா...
(இஷான்)
கட்ட போய் சேந்துடனும்
இல்லன்னா கிழவன
கூட்டிட்டாவது போயிடனும் ஆத்தா...
(இஷான்)