மருத்துவர்களே செவிலியர்களே சரண் சரணம்
நோய் கண்ட உலக மாந்தருக்கெல்லாம்
நோயை அகற்றி நொடி தோறும் காத்து
செம்மைப்படுத்தி செயற்படவைக்கும்
மருத்துவர் செவிலியர் மருந்தாளுநர் யாவரும்
கோவிலில் இருக்கும் குறைத்தீர்க்கும் கடவுளாம்
எந்நிலை நோயும் எந்நேரம் தோன்றினும்
அந்நோயை அழிக்கும் அற்புத வேந்தராம்
கருக்கல் விடியல் கடும் பகல் இரவென
அறுபது நாழியும் அயராது உழைத்து
அகில மாந்தரையும் அடைகாக்கும் பறவையாம்
நெல்லினுள் வளரும் புல்லினம் போலே
இத்துறை கயவரை விலக்கிப் பார்த்தால்
பன்னெடு சிரம் புரம் பூண்ட இறைவன் இவர்களே.
------ நன்னாடன்.