பெண்ணே
ஒரு அற்புதம் போல்
பறந்துகொண்டிருந்த பொழுது
வளைந்து மறித்த வானவில்
உன்னிடம் சொல்லியிருக்கவேண்டும்
அல்லது
இரவின் துவக்கத்தில்
வானைப்பிரிந்துகொண்டிருந்த
நீலவண்ணம்
கொஞ்சமேனும் உணர்த்தியிருக்க வேண்டும்
எனதன்பின்பாதை
விசாலமானதும்
வண்ணமயமானதுமென்று..
உன் சிறகடிப்பின் வழி
சிறிதாவது
அணிந்துகொள்
பிறகு
என் வானம் வசப்பட்டுவிடும்..
Rafiq