நன்மை கிட்டும் நானிலத்தில்

நன்மை கிட்டும் நானிலத்தில்

கடவுள் இருக்கு இல்லையெனும்
--------கருத்தைக்; காற்றில் விட்டுவிடு
கடமை செய்ய விரும்பிவிடு
-------கருத்தில் நேர்மை விதைத்துவிடு
திடமாய் எதையும் செய்திடவே
------திண்ணம் மனதில் படியவிடு
மடமையை தூரத்தில் எறிந்துவிடு
-----மகிழ்ந்தே எதையும் செய்துவிடு

உயர்வது ஒன்றே லட்சியமாய்
------உள்ளத்தில் உறுதி கொண்டுவிடு
அயர்வை அப்பால் வீசிவிட்டு
------அடுத்ததை செய்ய முயற்சியெடு
முயற்சி செய்வதை நிறுத்தாமல்
-------முடிகின்ற வரையில் உழைத்துவிடு
மயக்கம் தயக்கம் வந்தாலும்
மண்ணாய் நினைத்து ஊதிவிடு

வியர்வை சிந்தும் மனிதர்க்கு
------விண்ணும் மண்ணும் மதிப்புதரும்
துயரத்தை பெரிதாய் நினைத்தாலே
------துலக்கம் கிட்டுவ தெவ்வாறு
கயவர்கள் சிலரால் உன்வாழ்வில்
-----காரியத் தடைகள் வந்தாலும்
நயமாய் நடக்க பழகிவிட்டால்
----நன்மை கிட்டும் நானிலத்தில்.

சொ.பாஸ்கரன்

எழுதியவர் : சொ. பாஸ்கரன் (26-Mar-20, 3:43 pm)
சேர்த்தது : சொ பாஸ்கரன்
பார்வை : 46

மேலே