வண்ணப் பாடல் கணபதி

தனனா தனனா தனதானா
தனனா தனனா தனதானா

திருமே னியில்நீ றணிவோனே
சிவனார் மகனே முதல்வோனே!
கரிமா முகனே கணநாதா
கனிவா யருள்வா யுமைபாலா!
வருவா யெலிமே லெளியோனே
வடிவா யசையா முறம்போலும்
இருகா துடையோ யிளகாயோ
எளியேன் குறைநீ களையாயோ?

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (27-Mar-20, 2:17 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 7

மேலே