கொரோனா இங்கும் அங்கும்

தனித்திருந்து வாழ்நல் தவமணியே இந்தப்
பிணிதுரத்தி நீதூர ஓட்டு

சமூக விலகலை சாத்திரமாய் பின்பற்று
வன்கொடுநோய் யப்பால்ஓ டும்

வாட்ஸாப்பின் புள்ளிவிவ ரம்பார்த்து அஞ்சாதே
வாஷ்செய் திடுஒழுங்காய் கை

தொட்டால் தொடரும் கொடுநோயோ விட்டால்
பிடிக்க முடியாக்கா ளை !

மனிதன் மனிதனைத் தீண்டிடா இப்புதுத்
தீண்டாமை மாந்தர் மருந்து

எழுதியவர் : கவின் சாரலன் (28-Mar-20, 10:56 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 83

மேலே