கொரோனா🐙-----இஷான்
பழைய நோய் ஒன்று
புதிய சிறகு விரித்து பறக்குது...
வட்டார மனித வானத்தை
சுற்றி புரியாத கட்டம் போடுது...
முகத்திற்கும் முக்காடு
போட்டு காட்டுது...
தொட்டுப் பேசினா
தொற்றிடுவன்ணும் பயம் காட்டுது...
உலக வீட்டிற்கே கம்பி இல்லாத சிறைச்சாலை கட்டிக் காட்டுது...
சுத்தமா இல்லன்னா சத்தமே இல்லாம கொன்னுடுவேண்னு கொக்கரிக்கிது...
பிஸ்னஸ் என்னு பிஸியானவங்களுக்கு
பிரம்ப எடுத்து காட்டுது...
அறிவியலுக்கும் நரம்புத் தளர்ச்சி
வரும் என்னு வக்கணையா பேசுது..
கோடியும் ஒன்னுதான்
எனக்கு தெருக்கோடியும் ஒன்னுதான்னு
கொழுப்பே இல்லாம சொல்லுது.....