கொரோனா - சி எம் ஜேசு
ஆச்சரியம் தொற்றிக்கொண்டிருக்கிறது
அதிசயம் பற்றியெறிந்து கொண்டிருக்கிறது
அடங்கா மறுப்புடன் அகில உலகுக்கும் - எண்ணிலடங்கா
அழுத்தத்தை தந்துகொண்டிருக்கும் கொரோனா
ஒருவருக்கொருவர் பரவி அவர் மனவலிமையற்றவரானால்
அவரை மண்ணின்று பிரித்தெடுத்து விடுகிறது
தனித்திருப்பவன் தப்பிப்பான் சமூக விலகளோடு
சுமுகமாகி இருப்பவன் வாழ்வான் எனும் சூழலை தந்துவிட்டது
அடைந்துகிடப்பவரெல்லாம் மடிந்துவிடாமல் - உங்களின்
அங்கத்தை தங்கமாக்கிக் கொல்லுங்கள் கொரோனவை
மதியிழந்து போயிடாமல் சுருதி சேர்த்த இசைக்கருவி போல
முப்பொழுதும் சுத்தமாகி சத்தமாகுங்கள் ஓடிவிடும் கொரோனா
மாயங்கள் செய்து உலகமெல்லாம் தழைத்து
மரண கோலங்களைக் காட்டிக்கொண்டிருக்கிறது கொரோனா
தேசம் நேசமாகி உதவிக்கரம் நீட்டுவதால் தப்பித்தோம்
இல்லையேல் அரண்டு இருண்டு போய்விடும் நம் வாழ்வு
ஊரடங்கு உத்தரவை பின்பற்றுவோம் நாம் கருகும் சருகுகளல்ல
தனித்திருப்போம் அறிவால் விழித்திருப்போம் மீண்டு ஒளிகாணுவோம்
ஓங்கி வளர்ந்தெழுந்து உலக மக்களுக்கு நிழலாகி போகும்
மரத்தினின்று ஒரு சருகு விழும்போதெல்லாம் அம்மரத்தின் நிழல்
சிறிது சிறிதாக கலைந்து போகும் சூழலை கொரோனா நோயினால்
உலக மக்கள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம்