முட்டாள்கள் தினம்

முட்டாள்கள் தினம்

ஆறறிவு பெற்றவன்
என்ற
இறுமாப்பு...

அனைத்துயிரையும்
அடக்கி ஆண்ட
ஆணவம்...

தன் இனம் பெருக்கி
நின்ற செருக்கு...

எல்லாம்
அழிந்து
கர்வம் ஒழிந்து

ஒட்டுமொத்த
மனிதகுலம்
நிற்கிறது
சிற்றுயிராம் கொரோனா
முன்
முட்டாளாய்....

எழுதியவர் : Usharanikannabiran (1-Apr-20, 9:18 am)
சேர்த்தது : usharanikannabiran
Tanglish : MUTTALKAL thinam
பார்வை : 44

மேலே