கொரோனா ஒழிப்பு

கொரோனா ஒழிப்பு
கட்புலன் உணர இயலா நுண்ணுயிரி!
கட்டுப்பாடின்றி பல்கிப் பெருகும்
அவ்வுயிரி!
கட்டம் பல தாண்டி தாக்கும்
வன்உயிரி!
கட்டும் நமக்கு கல்லறை அதை உணர் நீ!
இத்தருணம் வேண்டும் மனிதரிடை சிறு இடைவெளி!
சுத்தம் காப்போம் யாண்டும் நம்
பொதுவெளி!
மொத்தபேரும் இல்லம் உறைவதுவே நல்வழி!
மெத்தனமாய் இருக்க வேண்டாம்
உணர்ந்திடு நீ!
வெட்டியாக வெளிஇடம் வந்து
உலவாதே!
ஒட்டிக்கொள்ளும் வைரஸ் அது
மறவாதே!
சட்டதிட்டம் போடும் அரசை
மீறாதே!
பட்டவர்கள் படும்பாடு கண்டு தெளிவாய் நீ!
கொரோனாவை வெல்ல மனிதன் தொடுக்கும் போர் இது!
மனிதர்கள் தனித்திருத்தல் அப்போரின் முக்கியக் கூறது!
அறுக்கப்படும் ,களையப்படும்
கொரோனாவின் வேர் அது!
அறிவு சார்ந்து தனித்திருந்து
அதற்கு உதவிடு நீ!