தாய்யும்மானவன்
கருவுற்று ஈன்றால் தான் தாய்மை புரியுமா...
கண்மூடி இறந்தால் தான் பிரிவின் வலி தெரியுமா....
கடவுள் என்பது நம்பிக்கை....
தாய்மை என்பது நம் உணர்வுகள்....
மீசை வைத்து தோளில் சுமந்த தந்தைக்கும் தாய்மை இருக்கு.....
தாய்யுள்ளம் போதுமே.... தாயாக வேண்டுமோ!!
தாய்யுள்ளம் போதுமே.... தாயாக வேண்டுமோ!!
இவன் கண்களின் ஈரம் சொல்லும்....மனதின் ஆழத்தை....
அந்த பிஞ்சு இதழ்களின் சிரிப்பில்....இவன் மடி பால்சுறக் காதா....!!!!
தாய் சேய் அறுந்த தொப்புள் கொடி..இணைத்த நினைவுகள்.....
புரியத் தேடினால் புலப்படாது அடிவானமாய்....
தாய்க்கு பிள்ளையின் எண்ணம் பார்வையில் புரியும்!
தந்தையாய் நானும் எண்ணத்தில் புரியும்....!!!
பிறந்தவுடன் தொட்டு தூக்க கூச்சம்...
அவள் பிஞ்சு விரல்கள் என் முரட்டு கைகளில்....
காலம் என் காதலை கடவுளாக்க...
முரட்டு கைகளில் முல்லை மலராக அவள்...
என் கண்ணிர் வார்த்து
உன்னை வாடாமல் பார்த்தேன் ....
வானம் காட்டும் வானவில் போல என் வாழ்வில் நீ வந்தாய்.....
அது மறைந்தாலும் நீ மறையாமல் என் சேய்யாய் வண்ணம் தந்தாய்...!!!
தவழ்ந்தாய்
நின்றாய்
நடந்தாய்
ஆளாகி இதோ என் ஆணி வேராக இருக்கின்றாய்...!!
கடவுள் கொடுத்த வரம் நீ....
தாய்யாகவில்லை நான் தாயுமானவன்....
உன் தோழன்
உன் ஆசான்
உன் வீரம்
உன் வெற்றி
உன் தோல்வி
உன் மகிழ்ச்சி
உன் கண்ணிர்
உன் எல்லாம் நான்...
தாய்யும்மானவன்....தாயகவில்லை நான்.....!!!