வீடும் நாடும் உலகும் --- COVID19 ---- 2020 --- சி எம் ஜேசு
வீடும் நாடும் உலகும்
--- COVID19 ---- 2020 -----
கொரோனா - மாயநோய்
இது வரும் என எவரும்
நினைத்திருக்க மாட்டார்
எதுவரை இந்நோய் என சொல்லிட
முடியா நிலையாக்க விட்டுவிடாதீர்கள்
பரவிடாமல் இத்தொற்றை
வரவிடாமல் ஆக்கும் நன்முயற்சியே
தேசத்தின் ஊரடங்கும் உத்தரவு
உலகினோர் எல்லாம்
கலக்கத்திற்குள்ளாயினர்
உணர்வுகளற்று போக
உயிர்கள் பட்டுபோகும் நிலைக்கண்டு
கதறிடும் குடும்பத்தினர்
பதறிடும் உலக மக்களென
நாடுகளின் அன்றாடப்பணிகள்மாறி
உலகமே இன்று மருத்துவத்திற்க்குள்
வாய்ப்பூட்டுபோட்டுக்கொண்டு
உத்வேகமாகிக்கொண்டிருக்கிறது
அரசு இன்று வெளிநிலைக்காணும்
மக்களின் விந்தைகளை களைந்து
சந்தைகளில் மந்தைகளை போலல்லாமல்
வாங்கும் பழக்கத்தை சொல்லி
தனி மனித இடைவெளியினைக்
கற்றுக்கொடுத்துக்கொண்டு இருக்கிறது
இதுநாள் வரை செய்த சுத்தங்களைவிட
இனிச்செய்யும் தனி மனித சுத்தங்கள்
சத்தமாகிக்கொண்டு இருக்கிறது
அரசுகள் எல்லாம்
ஆக்கமும் ஊக்கமும் கொண்டு
அன்றாட பணிகளுடன் மக்களை
அழகிய இல்லறமெனும்
குடும்பத்திற்குள் இயக்கமாகும்
சேவையினை செய்துகொண்டு இருக்கிறது
அது புரியாமல்
வரும் நோயின் தீமையறியாமையால்
மக்கள் சட்டத்தின் சாட்டைக்குள்
அகப்பட்டுக் கொள்கின்றனர்
தினங்கள் தோறும் தீமையெனும்
நோய்த்தாக்கம் பரவிடாமல்
கணப்பொழுதுகள் கூட
கண்ணுறங்காமல் காக்கும் கடவுளாக
இன்றைய மருத்துவமும் சட்டமும்
கட்டத்திற்குள்ளிருந்து பணிகளாற்றுகின்றன
நிலவட்டும் தொடர் அமைதி
நகரட்டும் ஊரடங்கும் உத்தரவு நாட்கள்
அதன் பின் காணுவோம்
நிலவொளி போன்ற நோயற்ற வாழ்வை
ஒருவர் தவறால் ஆயிரத்திற்கும்
அதிகமானோர் ஏன் வதை பட வேண்டும்
ஒருவரின் நோய் தோற்று
உலகினோரின் வாழ்வை ஏன் சிதைக்க வேண்டும்
சிந்திப்போம் செயலாக்கம் செய்வோம்
வீடே ஆலயம் நாடே புனிதம்
உலகமே கடவுள் எனும் கூற்றுக்கு
மாற்றம் நினைக்காமல்
மனமாகி குணமாகி நாளைய வருங்காலம் சமைப்போம்
சோதனைகளை சாதனைகளாக்கும் முயற்சியில்
உங்களுடன் நானும் இணைந்தவனாக உங்களின
( இடரினும் தளரினும் எமதுரு நோய்
தொடரினும் உனக்கழல் தொழுதெழுவேன் - எனும்
தேவார பதிக்கம் பாடித் தொழுவோம் இறைவனை )