இல்லத்து அரசிகளே

இணையத்தில் நன்றி பதிவுகள் பலவற்றை கடந்து வந்தேன்.

நம் மக்கள் மருத்துவர்கள்,செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் அனைவர்க்கும் நன்றிகளை பறைசாற்றி வருகிறார்கள். மிகவும் மகிழ்ச்சி.

இன்னும் சிலர் விவசாயிகள், வியாபாரிகள்,அவசர ஊர்தி ஓட்டுனர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு நன்றி மொழிகளை பகிர்ந்து வருகின்றனர். வரவேற்க தக்கது.

இன்னும் சிலர் ஊடக சேவை வழங்கும் நிறுவனங்களுக்கும் நன்றி செலுத்துகின்றனர்.

செயலிகளில் நன்றியை பகிர்ந்து விட்டு, அம்மா இன்னைக்கு என சாப்பாடு செஞ்சjQuery17105226025149730822_1586090969027

ஐயோ இன்றைக்கும் பருப்பு,காய் ரசமா??

இந்த இணையத்தை பாத்து புதுசு புதுசா ஏதும் சமைக்க மாட்டியா அம்மானு கேக்கற
என் அருமை சகோதர சகோதரிகளுக்கும் , ஐயோ பையனுக்கு சூடு தண்ணிகூட வைக்க தெரியாதுன்னு சொல்ற என் அம்மாக்களுக்கும் இந்த பதிவு.

என் அருமை இல்லத்து அரசிகளே நீங்கள் தான் வருங்கால சிறந்த கணவன்களையும், சிறந்த மருமக்கள்களையும் உருவாக்கும் சிற்பிகள்.
நீங்கள் அன்றாடம் செய்யும் வேலைகளை உங்கள் குழந்தைக்கும், கணவருக்கும் கற்று கொடுக்க சிறந்த தருணம்.
வீட்டுப்பாடம் இருக்கு என்றும், வேலை இருக்கு என்றும் தப்பி செல்ல வழியில்லை.
வேலைகளை பகிர்ந்து கொண்டால் ஆண்மை குறைந்து போகாது என்பதை கற்று கொடுங்கள்.

வீட்டு வேலைகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானது என்பதையும் கற்று கொடுங்கள்.

சமீபத்தில் என்தோழியுடன் உரையாடிகொண்டு இருந்தபொழுது அவள் கூறினாள். நான் உணவகங்களுக்கு சென்றாலோ , ஏன் வீட்டில் கூட நிறைய உணவை வீணாக்கி இருக்கிறேன். இப்பொது உணவு பொருள்களை பார்த்து பார்த்து உபயோகிக்கும் போதுதான் அதன் அருமை புரிகிறது என்று.
தயவு கூர்ந்தது குழந்தைக்குளுக்கு உணவின் அவசியத்தையும் உணவு கடைகளில் கிடைப்பதில்லை. அதற்க்காக விவசாயிகள் பெரும் உழைப்பை காணிக்கையாக்குகிறாள்கள் என்பதையும் கற்று கொடுங்கள்.

வீட்டு வேலைக்காரர் விடுப்புஎடுத்தாலும் நம்வேலைகளை நாம் பார்க்க கற்றுக்கொண்டால் தவறில்லை என்பதை சொல்லிக்கொடுங்கள்.

என்றும் விடுப்பே இல்லாமல் உழைக்கும் உங்களுக்கு நன்றிகள் கோடி.

எழுதியவர் : கோப்பெருந்தேவி (5-Apr-20, 6:12 pm)
சேர்த்தது : கோப்பெருந்தேவி
பார்வை : 129

மேலே