ஒரு இளைய கைதியின் கதை

செய்யாத குற்றத்திற்கு தண்டனை
சிறைப்பள்ளி ஒன்றில் தனி அறையில்
ஆம் சிறைப்பள்ளியில் naan இன்னும் சிறுவன் அதனால்
என்னுள்ளமோ அவ்வறையில் இருக்க மறுத்து
வெளியே சென்றது ..... சென்று அங்கு
சிரையோரம் ஓடும் சிற்றோடையில் கலந்து
பச்சை பசேலென்று காணும் வயல் வெளியில் ....
பசுந்தரையில் பூத்து குலுங்கும் சாமந்தி பூக்களிடையே ....
இப்படி போய்க்கொண்டிருக்க.... அங்கோர்
குழலூதிச் செல்லும் இடைச் சிறுவனைக் கண்டது
அவன் இசைக்கு மயங்கி மௌனமாய் போய்க்கொண்டிருக்கும்
ஆவினங்கள்.... அவன் சிரிப்பில் மயங்கி
என் மனம் நின்றது அங்கே...ஆய்ச்சிறுவன்
ஒன்றும் யோசிக்காது ஒரு காட்டுப்பூ ...வாசம் இல்லா
அழகில்லா பூ அதை என் கையில் வைத்து சிரித்தான்
கண்ணை மூடிக்கொள் என்றான் குழல் ஓதியே
கண் மூடினேன் ( மனமாகிய நான்) குழல் ஓசை கேட்டுக்கொண்டே
குழல் ஓசை நின்றது... கண் திறந்தேன்
ஆவினங்கள் காணவில்லை .... இடைச்சிறுவனும்
கையில் அவன் தந்த காட்டுப்பூ ,,,,, அது
இப்போது அழகிய சிவப்பு ரோசாவாய் மாறி இருக்க
புரிந்து கொண்டேன் நானாகிய என் மனம் இல்லை
என் ஆத்மா.......

மீண்டும் சென்றடைந்தது சிறைப்பள்ளிக்கு
என் தனி அறைக்கு,,,,,,,,,

விடியல் ஆனது...... என் தண்டனை முடிந்தது
என விடுவித்தனர் என்னை....
செய்யா குற்றத்திற்கு தண்டனை அனுபவித்து

கையில் இடைச்சிறுவன் தந்த ரோசா
இன்னும் வாடவில்லை,,,,

இதோ வீடு நோக்கி நான் புத்தனுர்ச்சியுடன்
நாளை எனக்கு வயது பதினெட்டு .....
புது வாழ்க்கைத் தொடங்க அவன் தந்த பூ
அவன் யார்...... ??????
என் மனம் சொன்னது அவன் இடைச்சிறுவனாம்

ஆயர்பாடி கண்ணனே .... குழலூதும் கண்ணன்
நம்மை வாழவைக்க வந்த மனித தெய்வம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (5-Apr-20, 8:32 pm)
பார்வை : 87

மேலே