தாமரையோ என்னவளின் முகம்

நளினி ரோஸ் நிறத்து அழகி "கம்ப்யூட்டர் சயின்ஸ்" இறுதி ஆண்டு படித்து கொண்டு இருப்பவள். கல்லுரி சுற்றுலா பயணமாக 'மைசூர்' செல்ல திட்டம்மிட்டு இருந்தனர் அவளது காலேஜில்.

நளினி பெற்றோர்கு ஒரே பெண் அதனால் வெளியூர் பயணங்கள் அனுமதி இல்லை. இருந்தும் பெற்றோறிடம் அடம்பிடித்து அனுமதி வாங்கினாள் நளினி. அவர்களும் அறை மனதுடன் சம்மதம் தெரிவித்தனர்.

மறுநாள் சுற்றுலா செல்ல பயணத்துக்கு தேவையான அணைத்து பொருட்களும் தயாராக எடுத்து வைய்த்து கொண்டாள்.

தந்தை வாங்கிய புது 'வைய்லட்'  நிற  'கஷ்மீர்' சல்வார் உடை அணிந்து பயணத்திற்கு தயாறாகி வந்த தன் மகளுக்கு  வருசையாக அறிவுரை வழங்கி கொண்டிருந்தார் நளினியின் தாய் அமிர்தம் .

மா.. போதும் மா. நீங்க சொன்ன எல்லா அட்வைஸ்யும் 'மொபைலில் ரெக்கார்ட்' செய்து வைச்சுட்டேன் திரும்ப திரும்ப கேட்டு அதன் படி நடந்துக்கிறேன் ஓ.கே. என்று தன் தாயை கட்டி பிடித்து சமாதானம் செய்து பின் தந்தையுடன் கிளம்பினாள்.

அவளது பயண பொருட்கள் நிறைந்த சூட்கேஸ், மற்ற இத்யாதிகள் எடுத்து கொண்டு பைக்கில் சென்றனர் .  கல்லலூரி ஏற்பாடு செய்திருந்த 'பஸ்சை' நோக்கி.   அவர்கள் சென்று கொண்டிருந்த பாதையில் நாற்பத்தைந்து வயது  தாண்டிய ஒரு பெண் நெஞ்சு வலி வந்து விழுந்ததை பார்த்து உடனே தந்தை, மகள்
இருவரும் பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு. அந்த பெண்மணியை நோக்கி ஓடி சென்று அவருக்கு தேவையான முதலுதவி சிகிச்சை அளித்து உடனே மருத்துவமணை அழைத்து சென்றனர்.

அந்த பெண்ணின் மொபைலில் இருக்கும் 'நம்பர்' தொடர்பு கொள்ள முடியுமா என தேடியதில் 'இன் கம்மிங் காலின்' முதல் நம்பருக்கு அழைத்து. அவரை  பற்றிய விபரங்கள் தெரிவித்தனர்.

எதிர் முனையில் அப்பெணிண் மகன் போன் அட்டன் செய்தான் . விபரங்களை கேட்டதும் பதட்டதுடன் மருத்துவ மணையின் விபரங்களை கேட்டு அங்கு வந்து சேர்ந்ததும் தன் தாயை காண ஓடினான். அந்த பெண் அப்போதும் உறக்கத்தில் இருந்தார்.  அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவரை அணுகி விபரங்களை கேட்டான் .

டாக்டர் அம்மாவுக்கு எப்படி திடீர்னு 'அட்டாக்' வர்ற அளவு காரணம் என்ன? என்றான் கவலையாக. மருத்துவர் அவனை நோக்கி 'லுக் மிஸ்டர்' உங்க அம்மா அதிக அளவில் மன அழுத்தம் கொடுக்கும் படி ஏதோ நடந்திருக்கனும் அதனால தான் இப்படி. அவங்க மனசுக்கு என்ன வேண்னும்னு பார்த்து அது படி அவங்கள சந்தோஷமா வச்சுகிறது தான்.
அடுத்த முறை இது மாதிரி நடக்கிறத தடுக்க முடியும். "சோ யூ ஹவ் டூ டேக் கேர்" அவங்களுக்கு மன அமைதி முக்கியம்.
'ஈவ்னிங்' அவங்கள அழைச்சிட்டு போகலாம் என கூறி சென்று விட்டார்.
'தேங்ஸ்' டாக்டர் என சொல்லி தன் அம்மாவை காண சென்றான்

அவனை பார்த்ததும் வா.. பா அரவிந்த் என்று தன் மகனை அன்புடன் அழைத்தார். மா ஏம்மா இப்படி செய்றிங்க?. நான் தான் ரெண்டு வருஷம் கழித்து கல்யாணம் செய்துக்கிறேன்னு சொன்ன இல்லையா? என்று தன் தாயிடம் கவலையுடன் கோபித்தான்.

இல்ல 'அர்வி'. இப்பவே உனக்கு இருபத்தி ஏழு வயசு ஆகுது . உங்க அப்பா விட்டு போன இந்த பத்து வருஷத்துல.
நீ உன் தங்கை கல்யாணம் செய்ய அவளுக்கு ஒரு நல்லவிதமான துணையை தேட எவ்வளவு கஷ்டப்பட்டனு எனக்கு தெரியும் பா.

நான் நல்லா இருக்கும் போதே உனக்கு ஒரு நல்ல துணையை தேடி குடுத்துட்டேன்னா நிம்மதியா கண்ண முடுவேன் பா.. என்றார்.

என்ன மா.. என்று கோபமாக அரவிந் வாயை திறக்கும் போதே .லேசாக அறை கதவு தட்டப்பட அரவிந் சென்று கதவுகளை திறந்து உள்ளே வரும் படி அழைத்தான் . நளினியை கண்டு இந்த பெண்ணை நான் எங்கேயோ பார்திருக்கிறேனே எங்கு என்று யோசித்தான்.

அரவிந்தின் நண்பன் மகேஷ் வீட்டில் அவன்  தங்கை மீனாவுடன். ஆம் நினைவு தட்டியது அவனுக்கு.அதே கதைகள் பேசும் கண்கள். எந்த பெண்ணிடமும் ஏற்படாத ஈர்ப்பு அன்று அவளிடம் தோன்றியது என்னவோ உண்மை தான்.

சென்ற மாதம் பார்த்தவள் அவளை பற்றி அறிய நினைத்தவனுக்கு .இப்படி ஒரு சூழ்நிலையில் நேரடியான சந்திப்பு . தன் தாயின் மனக்குமுறல் தான் இந்த மாதிரியான சந்திப்போ என்று கூட நினைத்தான்.

அவனது தாய் சிவகாமியை பார்த்து நலம் விசாரித்தனர் நளினியும், அவள் அப்பா சிவராமனும். தன் சொந்தமாக நினைத்து சில அறிவுரைகள் வழங்கினார் சிவராமன்.
பின் தன் மகளை காண்பித்து இவள் என் மகள் நளினி  பி.எஸ்.சி  'கம்ப்யூட்டர் சைன்ஸ்' இறுதி ஆண்டு படிப்பதாகவும், 'காலேஜ் டூர்' செல்ல இருந்ததாகவும் கூறினார்.

சிவகாமிக்கு இதை கேட்டவுடன் சங்கடமானார். சாரிமா நளினி என்னால தான் உனக்கு 'டூர்' போக முடியாம போச்சு என்று வருத்தம் தெரிவித்தார். நளினி பரவாயில்லை 'ஆண்ட்டி' .உங்களுக்கு சரியா ஆனதே அதுவே போதும் என்று சமாதானம் செய்தாள்.

அரவிந்த் அவளின் குயிலோசை குரலையும், பளிங்கு முகத்தையும் கண்டு  அவளின் 'ரசிகனாக' மாறியது அவன் மனம். சிவகாமியின் அழைப்பு அவனை தன்நிலை அடைய செய்ய. தன் செயல் உணர்ந்து வெட்கினான் மனதில்.

சிவகாமி தன் மகனை அறிமுகம் செய்ததில் மரியாதை நிமித்தமாக 'வணக்கம்' தெரிவித்தான். சிவராமன் 'நோ பார்மாலிட்டிஸ் யங் மேன்' என்று சகஜமாக பேசினார். சிறிது நேரம் அவர்களின் தொழில் விபரகள் பேசிய பின்.  எந்த உதவி வேண்டுமானாலும் அழைக்கும் படியும், தங்கள் வீடு அருகில் தான் இருப்பதாகவும் சொல்லி 'மொபைல்' எண்ணை அவனிடம்  தந்துவிட்டு விடைபெற்றனர்  நளினியும் ,சிவராமனும்.

அந்த பெண் எவ்வளவு அழகா இருக்கா இல்ல அரவிந்த் நல்ல தன்மையாவும் பேசறா. ஹம்... இப்படி ஒரு மருமக வேணும்னு தான் ஆசபடுறேன் என்று பெறுமூச்சு வெளியிட்டார்.

தன் அம்மாவை பார்த்து மென்மையாக சிரித்து கவலை படாதமா. அவளையே உன் மருமகளா கொண்டு வந்துடலாம். என்ற தன் மகனை ஆச்சரியம் நிறைந்த விழியில் பார்தார் சிவகாமி.

ஆமா மா. நம்ம மகேஷ் வீட்டில் ஒரு முறை இந்த  பெண்ணை பார்த்து இருக்கேன்.அவன் தங்கை மீனா கூட தான் படிக்கும் போல என்று விளக்கம் தந்தான்.

சிவகாமிக்கு மகிழ்ச்சி தாங்க வில்லை. தன் மகனிடம் பாத்தியா விரதம் இருக்காத ,கோயிலுக்கு நடக்காதன்னு 'கண்டிஷன்' போடுவியே. என் மருமகளை என்கிட்ட கொண்டு வந்து செத்துவிட்டது நான் கூம்பிடும் சாமி. என்னை கைவிடல  பாத்தியா. என்று தன் மகனிடம் மகிழ்ச்சியாக கூறினார்.

மா. இப்ப தான் பார்த்து பேசி இருக்கோம். அவங்களுக்கும் விருப்பம் இருக்கனும் இல்ல. பொருமையா தான் அவர்களிடம் பேசி முடிவு எடுக்கனும். நீங்க முதல்ல ஆரோக்கியமா இருங்க அப்ப தான் எல்லாம் நல்லபடி நடக்கும் என்று தன் அம்மாவை நிதான படுத்தினான்.

மறுநாள் இதே நினைபுடனே மகிழ்ச்சியில் கழித்தார் சிவகாமி. ஒரு நாள்  முழுவதும் தன் தாயை கவனிக்க செலவிட்டவன் மருநாள் முக்கியமான 'மீட்டிங்' இருப்பதால்  தன் அலுவலகத்துக்கு கிளம்பினான்.

இரண்டு நாட்கள் கழித்து சிவகாமி மகேஷின் அம்மாவை சந்தித்து பேச கிளம்பினார் நளினியை மருமகளாக அடையும் ஆசையுடன். அங்கு எதிபாராமல் நளினியை சந்திக்க நேர்ந்து மகிழ்ச்சி கொண்ட சிவகாமி நலவிசாரிபுக்கு பின் மகேஷின் தாயுடன் பேசினார். நளினியை பற்றியும், அவள் பெற்றோர் பற்றியும் கேட்டு அறிந்தார்.

பின் தன் வீட்டுக்கு கிளம்ப.நளினி தங்கள் வீட்டிற்கு வரும்படி அழைப்பு விடுத்தாள்.
சிவகாமியும் அவளுடன் சென்றார் மேலும் உறவை வளுபடுத்தி கொள்ளும் நினைப்புடன்.

நளினியின் தாய் அமிர்தத்திற்கு சிவகாமியை பற்றி தெரியும் அதனால் உடல் நலம் பற்றி கேட்டார்  . சிவகாமியும் தன் மகன் குறித்தான கவலைகள் மொத்தம் இறக்கி வைத்தார்.

பிறகு நளினியின் தாய் அமிர்தத்திடம் கேட்கிறேன்னு தப்பா நினைக்காதிங்க நாங்களும் உங்க  இனத்தை சேர்ந்தவர்கள் தான் நளினிய என் மருமகள தருவிங்களா? என்னடா இவ பார்த்து முழுசா இண்டுமணி நேரம் கூட ஆகல அதுக்குள்ள இப்படி கேட்கிறாளேனு நினைக்காதிங்க . நான் நளினிய பார்த முதல் நாளே என் மனசுல அப்படி ஒரு எண்ணம் வந்துவிட்டது.

என் பைய்யனும் மாசம் ரெண்டுலே, இருந்து மூன்று இலட்சம் வரைக்கும் சம்பாதிக்கிறான்.எந்த கேட்ட பழக்கமும் கிடையாது . கஷ்டங்கள் உணர்ந்து வளர்ந்தவன். அவன் தங்கை பிரியாவுக்கும் அவன்தான் கல்யாணம் செய்து வைதான்.  அவனுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை தேடி தர்றது ஒரு அம்மாவா என் கடமையும் ,ஆசையும் இருப்பது சகஜம் தானே என்று தன் நீண்ட உரையை முடித்தார் சிவகாமி.

எல்லாம் பொருமையாக கேட்ட நளினியின் தாய் அமிர்தம்  இனத்துல என்னங்க இருக்கு நல்லவிதமான மனுஷங்கள பார்க்கிறது தான் கஷ்டம் இந்த காலத்துல. ஆனாலும் எந்த ஒரு பெரிய முடிவும் நளினி அப்பா எடுக்கும் முடிவு தான். அவர்க்கிட்ட பேசி என்று சொல்லி கொண்டு இருக்க சிவராமன் வண்டியின் சத்தம் கேட்டது. இதோ அவரே வந்துட்டார் என்ற அமிர்தம். நளினி ஆண்ட்டிக்கு காபி கொண்டு வா.. என குரல் கொடுத்தார்.

நளினியும் காபி, ஸ்னாக்ஸ்  என்று ட்ரேயில் வைத்து எடுத்துக்கொண்டு சிவகாமியிடம் நீட்டி எடுத்துக்கங்க ஆன்ட்டி என்று புன்னகை சிந்த கூறினாள்.
சிவகாமிக்கு மகிழ்ச்சி பொங்க எடுத்து  அருந்தினார் . நல்லா இருக்கு டா  காபி  என்றுவிட்டு இப்படி உட்கார் என்று அவள் கையை பிடித்து தன் அருகில் அமர்த்தி கொண்டார். அப்பொழுதும் அவள் கையை விடவில்லை சிவகாமி. விட்டால் இப்வே தன் வீட்டுக்கு அழைத்து சென்று விடுவார் போல.

நளினியும் அவரின் அன்பில் உருகி தான் போனாள் . இருவரும் அவளது காலேஜ் படிப்பு சம்பந்தமாக சிறிது நேரம் பேசி கொண்டிருக்க.

கணவனை அழைக்க சென்ற. அமிர்தாவும், சிவராமனும் வீட்டிற்குள் வந்தனர். வாங்க, வாங்கக்கா என சிவராமன் முறை வைத்து அழைக்க 'உச்சி' குளிர்ந்து விட்டார் சிவகாமி. அமிர்தாவுக்கும் மிகுந்த ஆச்சரியம் தான் யாரிடமும் எளிதில் பழகாத தன் கணவர் இவர்களிடம் முறைவைத்து கூபிடும் அளவுக்கு தன் கணவர் மனதில் பதிந்திருக்கிறார்கள் என அமிர்தத்திற்கும் மகிழ்சியே.

சிறிது நலவிசாரிபுக்கு பின் சிவகாமி சற்று தயங்க சொல்லுங்கக்கா என ஊக்கினார் சிவராமன். நளினி தந்தைக்கு 'தேனீர்' தயாரித்து வர கிச்சன் சென்றாள்.
சற்று தயங்கிய சிவகாமி மடமடவென அமிர்தத்திடம் சொல்லிய அனைத்தும் கூறி முடித்து நீங்கதான் பா முடிவு சொல்லனும் என்று சிவராமின் முகம் பார்த்தார்.

அவருக்கு ஆச்சரியம் , மகிழ்ச்சி, பூரிப்பு, என கலவையான முக பாவத்துடன் அட எப்படி அக்கா அரவிந்த் தம்பிய பார்ததிலிருந்து எனக்கும் இதே நினைப்பு தான். உங்களுக்கு விருப்பம் இருக்குமோ என்னவோனு  தான் யோசித்து கொண்டு இருந்தேன் ஆனா அரவிந்த் தம்பிக்கும் இதுல விருப்பம் இருக்கனுமே... என்றார் சற்று சோகமாக.


அட நீங்க வேற அர்வி முதலேயே ஒரு தடவை தன் நண்பன் மகேஷ் வீட்டில் நளினிய பார்திருக்கானாம் .ரொம்ப பிடித்து இருக்குன்னும் சொல்லியாச்சு.அவனுக்கும் உங்கள மாதிரி தான் தயங்கிட்டு இருந்தான் உங்க விருப்பம் இருக்குமோ இல்லையோன்னு.....

சரி நம்ம விருப்பங்கள் எல்லாத்தைய விட நளினிய ஒரு வார்தை கேட்டுக்கங்க அவளோட முடிவு தான் முக்கியம் என்ற சிவகாமியை கண்டு பெருமை கொண்டனர் சிவராமன் தம்பதியர் தங்களுடைய கணிப்பு சரியானதே என்று.

சற்று நேரத்தில் டீயுடன் வந்த நளினியிடம் கேட்டார் சிவம்ராமன் இங்கவாடா . உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் கேட்க போறேன். தெளிவா யோசிச்சு முடிவ சொல்லு என்றார். சிவகாமி அம்மாளினன் கோரிக்ககையை கூறினார் சிவம்ராமன்

அவள் ப்பா.... படிப்பு என இழுத்தாள்... நளினி அதேல்லாம் முடிந்த பின் தான். உனக்கு 'டைம்' எடுத்து யோசிக்கனும்  இல்லையா?. நல்ல முடிவா சொல்லுமா  என்று எதிபார்ப்புடன் கேட்ட தந்தையை பார்த்ததும் .என் அப்பாவுக்கு தான் எவ்வளவு நம்பிக்கை என் மீது. எனக்கு அவர்களின் நம்பிக்கையை காப்பாற்றும் கடமை  இருக்கிறது என்ற நினைப்புடன்.

அதேல்லாம் ஒன்னும் இல்ல அப்பா நீங்களும் அம்மாவும் எந்த முடிவு எடுத்தாலும் அது என் நன்மைகள் நிறைந்ததாக தான் இருக்கும் அதனால எதுவும் உங்க முடிவுதான் என்றாள்.

அதற்கு இல்ல நளினிமா உன் வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் உரிமை உனக்கு இருக்கிறது. அந்த அளவு தெளிவாதான் உன்ன நாங்கள் வளர்த்து இருக்கொம் என்றார். நளினியும் பெற்றோருக்காக இல்லாமல் வெட்கத்துடன் தன் முழு சம்மதத்தையும் தெரிவித்தாள்.

பின்பு. பார்த்த நொடியில் மனதில் நுழைந்துவிட்டவனை. தற்போது கனவிலும் உலா வருபவனை எப்படி ஏற்காமல் போவாள் பேதை அவள்.

அவ்வளவு தான் சிவகாமிக்கு உலகில் உள்ள மகிழ்சி அனைத்தும் தன் மடி சேர்ந்த  நிலையை அடைந்தார் .  அன்று காலை தன் மகளுக்காக வாங்கியிருந்த தங்க செயினை. நகை டப்பாவில் இருந்து எடுத்து அவள் கழுத்தில் அணிவித்து விட்டு நெற்றியில் முத்தம் பதித்தார். அவரின் இந்த செய்கை சொல்லாமல் சொல்லியது நளினி தன் மருமகள் அல்ல மகள் என்று.

சிவராமன் தம்பதியருக்கு நிறைவான சந்தோஷத்தால் கண்கள் கலங்கிவிட்டது.
சரி இந்த இனிப்பான செய்திய முதல்ல அர்விக்கு சொல்லனும் நா கிளம்புறேன் என பத்து வயது குறைந்து விட்ட துள்ளளுடன் கிளம்பினார் சிவகாமி .

சம்பந்தி நா கிளம்புறேன் நல்ல நாள பார்த்து நிட்ச்சயம் செய்திடலாம் என்ற சிவகாமியிடம். முடியாது என கணீர் குரலில் கூறினார் சிவராமன் அனைவரும் சற்று திடுகிட்டு அவரை பார்க்க .அவரோ சிவகாமியை பார்த்து நீங்க சொந்த தம்பி போல என்னை  வா,போனு கூப்பிட்டா தான் நான் ஒத்து கொள்வேன் என்றவரை பார்த்து அனைவரும் கோபமாக முறைத்தனர்.

சிவராமனோ 'பக்' என சிரிந்துவிட்டார் சிவகாமியும் சரி பா. சிவம் என்னை வீட்டில் கொண்டு விடு என்று உரிமையாக கேட்க அவரும் உடனே கிளம்பினார்.

அமிர்தத்திற்கு அப்போழுதே கல்யாண பரபரப்பு தோன்றிவிட்டது 'கேலண்டர்' எடுத்து நல்ல நாள் பார்க்க ஆரம்பித்து விட்டார். நளினி தன் தாயை பார்த்து

அம்மா..

விட்டா இன்னைக்கே என்னை துரத்திடுவ போல இருக்கு .என வம்புக்கு  இழுத்தாள். அடி கழுத என்ன பேச்சு பேசர .ஒரு பெண்ண பெற்று வளத்து நல்ல வாழ்க்கை அமையனும்னு பெத்தவங்க கவலை பற்றி உனக்கு இப்ப தெரியாது.எல்லாம் காலம் பதில் சொல்லும் என்றார் நளினியை பார்த்து .

'ஓ மை காட்'ஒரு சின்ன கிண்டலுக்கு எவ்ளோ பெரிய விளக்கம் 'சோ சேட்' நா இல்லாம ரோம்ப கஷ்டபட போறம்மா நீ திட்டுறதுக்கு ஆள் இல்லாம என்ற மகளை பார்த்து .என்னடி நா எத சோன்னாலும் திட்டறதாவே நினைக்குற.என்று வழக்கு அடித்து கொண்டு இருக்க சிவராமன் வந்து விட்டார் சிவகாமியை  அவர் வீட்டில் விட்டுவிட்டு.

என்னங.. இங்க பாருங்க அடுத்தமாசம் மூன்றாம் தேதியில் ஒரு நல்ல முகூர்த்த நாள் இருக்கு.  அன்னைக்கே நிட்ச்சயத்த வச்சிடலாம் என்று கூறினார்.
ரொம்ப சரி மீரு(அமிர்தா) என்று அமோதித்தார் சிவம் நல்லகாரியங்கள தள்ளி போட கூடாது என்றார்.

இப்படி இவர்கள் பேசி கொண்டு இருக்கையில் மொபைல்  'ரீங்' ஆனது "ஜனனி ஜனி அகம் நீ புறம் நீ" என்று .சிவம்ராமன் போன்அடன் சொய்து காதில் வைகத்தார்.

எதிர் புறம் சிவகாமி தான் .இங்கு இவர்கள் என்ன பேசி கொண்டு இருந்தார்களோ. அதையே அச்சு பிறலாமல் சொல்லி முடித்தார் சிவகாமி.
நாங்களும் இதையே தான் பேசிகிட்டு இருந்தோம்  கா.. என்றார் சிவம்ராமன்.

நாளைக்கு 'ஜோசியரிடம்' ஜாதகம் பொருத்தம் பாதிடலாமா என்ற சிவகாமி சிவராமன் பதிலுக்காக காத்திருந்தார் .அப்படியே செய்து விடலாம் கா.. என்றார். பின் அவற்றை குறித்து சிறிது நேரம் பேசிவிட்டு.

நிட்ச்சயம் செய்யும் வேலைகள் குறித்து பேசிகொண்டே இரவு உணவை பறிமாறினார் அமிர்தம். சிவராமனும் அவரின் கேல்விகளுக்கேல்லாம் பதில் கூறி கொண்டு இரவு உணவை முடித்தார்.

நளினியோ இந்த திடீர் திருமண நிச்சயமும், தன் மனம் கவர்ந்தவனையும், நினைத்து கொண்டு அவள் உணர்வின் கலவையை அவளுக்கே புரிந்து கொள்ள முடியாமல் திக்குமுக்காடி போனாள் அவள்.

மறுநாள் சிவகாமி சொன்ன நேரத்தில் சரியாக வந்து சேர்ந்தார். பின் நளினியின் பெற்றோரும் அவரை அழைத்து கொண்டு குடும்ப  ஜோசியரிடம்  சென்றனர் . நளினி,அரவ்ந்த் இருவரின் பொருத்தம் பாரக்க.  ஜோசியரோ இவர்களின் பொருத்தை கண்டு மிகவும் வியந்தார் ஆயிரத்தில் ஒரு ஜாதகம் தான் இப்படி அமையும் மா.. சாட்சாத் அந்த  'ஜானகி,ராமன்' பொருத்தம் தான். கண்டிப்பா இவங்க ரெண்டு பேரும் தான் ஜோடி சேரனும் என்றான்.

இதனை கேட்டதும் சிவகாமி அம்மாளின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. பின் மூன்றாம் தேதியிலேயே நிட்ச்சய நாள் குறித்து விட்டு வீடு வந்து சேர்ந்தனர்.

நளினியும் காலேஜ் முடிந்து வந்திருந்தாள்  மருமகளிடம் சற்று நேரம் பேசிவிட்டு அரவிந்தின் 'மொபைல்' எண்ணை தந்து விட்டு சென்றார் அவளின் பெற்றோரின் சம்மதத்துடன்.

நிச்சயத்திற்கான துணி மற்றும் நகைகள் ஏடுப்பதிலும் சொந்தங்கள் ,நட்புகள் என அழைப்பு தெரிவிப்பதிலும் பெரியவர்கள் பிஸியாக இருக்க.

இங்கு திருமண ஜோடிகள் மொபைளிலும் தொடர்பு கொள்ளவில்லை. காரணம் நளினிக்கு தயக்கம் தான் முதலில் அவனிடம் எப்படி பேசுவதென்ரு இருக்க. அங்கு அரவ்ந்தோ முதன் முதலில் நேரில் தான் அவளிடம் பேச வேண்டும். அவளின் முகத்தில் வெட்கத்தினால் உண்டாகும் சிவப்பை காணும் ஆசையில் காத்திருந்தான்.

இதனால் நளினிக்கு சிறிது கோபம் கூட இருந்தது அவன் மேல். இருக்கட்டும் நேரில் பேசி கொள்ளலாம் என இருந்து விட்டாள்.

இப்படியே நாட்கள் இறக்கை கட்டி பறந்து நிட்ச்சய நாளும் வந்து விட்டது. தாமரை பூவின் நிறத்தில, அகலமான செரிகை கொண்ட காஞ்சி பட்டு சேலையும், அதற்கு தகுந்த கற்கள் பதித்த தங்க நகைகளும் அணிந்து. சாட்சாத் 'கேலண்டரில்' காட்சி அளிக்கும் லாட்சுமி தேவியே குதித்து வந்தது போல் இருந்தாள் நளினி.

அவளின் கண்களில் தோழிகளின் கிண்டலினால் வெட்க சிவப்பும் குடிபுகுந்து. அவளின் கணவுகளுடன் சேர்ந்து கொண்டது.

இங்கு அரவிந்த் ஆண்மகனுக்கே ஊறிய கம்பிரத்துடன், நேவி புளு 'லெனின்' ஷர்ட்டும்  கீரிம் நிற பேண்டும், ஷேவ் செய்த முகத்துடன் பளிச்சென்று இருந்து. அவனுக்கு மேலும் அழகை கூட்டியது.


நளினியிடம் பேச ஆவலுடன் காத்திருந்தான் வீட்டில் தன் அம்மாவிடம் கூறியே  அழைத்து வந்திருந்தான். தான் நளினியிடம் பேசும் விருப்பத்தை. இதனால் தங்கை பிரியாவின் கிண்டல்களும் பரிசாக கிடைத்தது அவனுக்கு.

நளினியின் வீட்டை அடைந்தவுடன் தன்னுடைய எந்த விஷயத்திலும் நிதானத்தை கையாளும் அரவிந்துக்கே உடலிலும் , உள்ளத்திலும் சிறிது பதற்றம் தொற்றி கொண்டது .

பெண் பார்கும் படலம் போல உபசரிப்புகள் முடிய அடுத்து நிச்சய பத்திரிக்கை வாசிக்க பதினைந்து நிமிடங்கள்  இருந்தது .அவன் தன் அம்மாவின் காதுகளில் சிசுசிசுத்தான்.

அவரும் நளினியின் பெற்றோரிடம் கேட்க சம்மதம் கிடைத்து .நளினியும்,அரவிந்தும் தனியே பேச அவர்களின் வீட்டின் பின்புற தேட்டத்தில் சேன்று பேச கூறினார் சிவராமன்.

அந்த இயற்கை சூழல் ரோஜ செடிகளும், மல்லிகை பந்தலும், நேர்தியாக அமைக்கபட்ட பலவண்ண மலர்களின் செடிகளும் கண்டு. அவனுக்கு  மேலும் மனதை மயங்க செய்தது .

நளினியே பேச வேண்டும், கேட்க வேண்டும் என்ற எண்ணங்கள் அனைத்தும் மறந்தவள் போல் 'சிலையென' அமர்ந்திருந்தாள் அவன் முன்.

அரவிந் அந்த இயற்கையின் மயக்கத்தில் இருந்து சற்று விடுபட்டு.சிலை பேல் அமர்திருக்கும் அவளை பான்தான் குரலை செரிமி கொண்டு நளினி என்று அழைக்க .சிலைக்கு ஊயிர் பெற்றது போல் அவளின் இரத்த ஒட்டம் பெரும் அளவு முகத்தில் குடியேரியது . அவள் அணிந்திருக்கும் சேலை நிறத்திற்கு மாற்றம் பெற்றது.கண்களும் குடையென விரித்து அவனை ஏறிட்டாள்.

இதை, இதை ..காண தானே ஆசை கொண்டான் நீர் நிலையில் மட்டும் தான் தாமரை மலரும் என்று யார் சென்னது .என்னவளின் முக அழகை கண்டால் தரையிலும் தாமரை மலரும் என்பதை கவிஞர்களும் ஒத்து கொள்வர்.

இந்த நினைவுகளுடனே  இருவரின் பார்வை பரிமாற்றமே திருமணம் பந்ததில் இணைத்தது.
இருமனங்களின் சங்கமமும் , பெரியவர்களின் ஆசிகளுடன்...
                  
                        முற்றும்
                        🌹💐🌹

எழுதியவர் : Piyu (11-Apr-20, 5:35 pm)
சேர்த்தது : Piyu
பார்வை : 102

மேலே