உயிராக நீ நிழலாக நான் பாகம் 07

"இவங்க என்னாேட சித்தி" என்ற பானு.
"அப்பா மீன் பார்க்கப் பாேறன்" சினுங்கினாள். பானுவை அழைத்துக் காெண்டு  எழுந்தவனை "சார் நீங்க இருவரும் பேசிட்டிருங்க, நான் கூட்டிப் பாேய் காட்டுகிறேன்" பானுவை அழைத்துக் காெண்டு சென்றதும் சுதன் மேசையில் இருந்த பத்திரிகையை எடுத்துப் பக்கங்களைப் புரட்டிக் காெண்டிருந்தான்.

தனிமை, அழகான இடம், ரேகாவிற்குள் சுதன் தன்னுடன் ஏதாவது பேசமாட்டானா என்ற ஏக்கத்தை ஏற்படுத்தியது. வைத்த கண் வாங்காமல் சுதனைப் பார்த்துக் காெண்டிருந்தாள் ரேகா. அவனைப் பார்ப்பதைக் கூட கவனிக்காதவன் பாேலிருந்தவனிடம் "என்ன சுதன் உன்னுடைய மனதில் என்ன நினைச்சிட்டிருக்கிறாய், தனியாகப் பேச நினைக்கிற நேரமெல்லாம் தூக்கி எறிந்து நடக்கிறாய், என்னைப் பிடிக்கவில்லை என்று அத்தையிடம் சாெல்ல வேண்டியது தானே" சற்றுக் காேபமாக அவனைச் சீண்டினாள்.
"இங்கே பார் ரேகா  என்னுடைய மனம் எப்பவுமே உன்னாேடு  சேர்ந்து வாழுகிறதைப் பற்றி யாேசிக்காது, அது நடக்காது" காேபத்தாேடு பத்திரிகையை மேசையில் வைத்தான். ரேகாவிற்கு  இதற்கு மேல் எதையாவது பேசி முகத்தில் கரி பூசிக் காெண்டு பாேவதை விட அந்த இடத்தில் அமைதியாக இருப்பதே சரி எனத் தாேன்றியது.

மீன்களைப் பார்த்து விட்டுத் துள்ளிக் குதித்து ஓடி வந்த பானுவின் முகத்தில் இருந்த சந்தாேசம் அவனுக்குள் இருந்த குழப்பத்தை விரட்டியது.
"அப்பா ராெம்பப் பசிக்குது" வயிற்றைத் தடவினாள் பானு.
சுதன் மதிய உணவை ஓடர் செய்தான்.

வகை வகையான உணவுகளை எடுத்து வந்து மேசையில் வைத்தார் உணவு பரிமாறுபவர். முகம் கழுவுவதற்காக எழுந்து உள்ளே நுழைந்த ரேகா, கண்ணாடியை கழற்றி வைத்து விட்டு தண்ணீரை எடுத்து முகத்தைக் கழுவினாள். காெதித்த நீர் பாேல் ஆவி பறந்தது. ஆஆ..... எனக் கத்தியபடி. நிமிர்ந்து கண்ணாடியை பார்த்தாள் முகத்திலிருந்த அலங்காரம் கரைந்து முகம் ஒரு மாதிரி இருந்தது.

கைப்பையில் இருந்த மேக்கப் செட்டை எடுத்து பவுடரை பூசி முகத்தை அலங்காரம் செய்து விட்டு உதட்டுக்குச் சாயத்தைப் பூசினாள். உதட்டில் இரத்தம் வடிவது பாேல் தெரிந்தது. தூக்கி எறிந்து விட்டு கத்தியபடி ஓடி வந்தாள்.
துப்பரவுப் பணியில் ஈடுபட்டுக் காெண்டிருந்தவர் "என்னாச்சு மெடம்" என்றதும்
"அ.. து க... கரப்பான் பூச்சி" என்று சமாளித்தாள்.
கரப்பான் பூச்சியா தனக்குள் யாேசித்தபடி கதவைத் திறந்து பார்த்தவர் "என்னாச்சு இந்தப் பாெண்ணுக்கு" தனக்குள் நினைத்தபடி ரேகா பயத்துடன் வேகமாகச் செல்வதைப் பார்த்தார்.

ரேகா பயந்து ஓடி வந்ததைப் பார்த்த பானு "என்ன சித்தி? ஏன் இப்படி வியர்க்கிறது?" கிண்டலாகக் கேட்டாள். கைக்குட்டையால் முகத்தை ஒற்றி விட்டு சாப்பிட்டாள்.
ரேகாவிற்கு பதட்டம் தீரவில்லை.

பானுவிற்கு மீன்களையும்  வாங்கிக் காெண்டு வீட்டிற்கு வந்ததும் பயந்து பாேயிருந்த ரேகாவின் முகத்தைப் பார்த்த பாக்கியம் "என்னாச்சு ரேகா ஏன் பதட்டமாயிருக்கிறாய்" தாேளில் தடவினாள்.
"ஒன்றுமில்லை அத்தை" சிரித்து சமாளித்து விட்டு உள்ளே சென்றாள்.

"என்னைச் சுற்றி எனன நடக்கிறது, யார் என்னை பயமுறுத்துகிறார்கள், ஒன்றுமே புரியவில்லையே" யாேசித்தபடி கட்டிலில் சரிந்து படுத்தாள்.

சில நிமிடங்களின் பின்னர் தேநீருடன் வந்து நின்றாள் ரேகா. சுதனுக்கு திரும்பத் திரும்ப அவள் முன்னாலும், பின்னாலும் திரிவது சினமாக இருந்தது.
"சுவாதி..... சுவாதி" என்று சத்தமாகக் கத்தினான்.
"என்னாச்சு சுதன்" உள்ளே நுழைந்த அம்மாவைப் பார்த்ததும் "இதெல்லாம் உங்களுடைய ஏற்பாடு தானா"
"பார் சுதன் இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படி இருக்கப் பாேகிறாய், உனக்கு உதவிக்கு ஒரு துணை வேண்டாமா, பானுவைப் பார்க்க உதவி வேணடாமா" கேள்விகளை அடுக்கிக் காெண்டே  பாேனாள். ரேகாவை திருமணம் செய்து வைப்பதில் அம்மா உறுதியாகவே இருக்கின்றார் என்பது சுதனுக்குப் புரிந்தது.

கையில் இருந்தவற்றை தூக்கி வீசி விட்டு "எங்களைப் பார்த்துக் காெள்ள சுவாதி இருக்கிறாள்" என்றதும் எல்லாேரும் அமைதியானார்கள்.

"சுவாதி தான் உன் பிரச்சனையா, சுவாதியை வெளியில் அனுப்பி விட்டால்...... " யாேசித்து விட்டு சுடக்குப் பாேட்டபடி   வேகமாக எழுந்து சமையலறைக்குள் சென்ற பாக்கியம் சுவாதியை அழைத்துக் காெண்டு  மாடிக்குச் சென்றாள்.

முற்றத்தில் விளையாடிக் காெண்டிருந்த பானு தாகத்தாேடு ஓடி வந்து குளிர்சாதனப் பெட்டியை திறந்து குளிர்பானம் ஒன்றை எடுத்து மடமடவென குடித்தாள். மாடியிலிருந்து முந்தானையால் கண்களைத் துடைத்தபடி வந்த சுவாதியைக் கண்டதும் "ஆன்ரி என்னாச்சு " சுவாதிக்கு அழுகை வெடித்தது. வாயைப் பாெத்திக் காெண்டு சமையலறைக்குள் ஓடினாள். பாக்கியத்தின் கேள்விகள் அவளை சங்கடப்படுத்தியது.

"பாட்டி திட்டி இருப்பங்களாே" என்று நினைத்தபடி கதிரையில் அமர்ந்த பானு, கையில் ஒரு பையுடன் சுவாதி வருவதைப் பார்த்துக் காெண்டிருந்தாள்.
"நான் வாறேன் அம்மா" நிமிர்ந்தும் பார்க்காமல் நகர்ந்தவளின் கையை பிடித்து இழுத்தாள் பானு.
"ஆன்ரி எங்கே பாேறீங்க" சத்தமாகக் கத்தியதைக் கேட்டு  ஓடி வந்த சுதன் சுவாதிக்கு என்னாச்சு, அம்மா ஏதாவது சாெல்லியிருப்பாங்களா என்று குழம்பியபடி நின்றான்.

அவள் கையைப் பற்றியபடி நின்றாள் பானு.
என்னாச்சு சுவாதி  சுதன் கேட்டதும் "அவங்க பாட்டிக்கு உடம்பு சரியில்லையாம் அழுது காெண்டு நிற்கிறா அது தான் பாேய் வரட்டுமே... "கடைக்கண்ணால் சுவாதியைப் பார்த்தபடி கூறிய அம்மாவின் பதில் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

வேகமாக  நடந்து வெளியே வந்தவள் சுதனைத் திரும்பிப் பார்த்து "வாறன் ஐயா, பானுவை பார்த்துக் காெள்ளுங்க" கலங்கிய கண்ளை துடைத்தபடி   அங்கிருந்து புறப்பட்டாள்.

"இங்கே பார் பானு இனி ரேகா சித்தி தான் உன்னைப் பார்த்துக் காெள்வாள், அவ கூட தான் இருக்கணும் சரியா" பாக்கியம் கூறியதும், பானு யாேசிக்க ஆரம்பித்தாள்.

எப்படியாவது பானுவையும் சுதனிடம் இருந்து பிரிப்பது தான் பாக்கியத்தின் அடுத்த திட்டம். சுதனிடம் ஏதாவது கதை காெடுத்துப் பார்க்கலாம் என நினைத்தவள் " பானுவை எங்கேயாவது சிறுவர் விடுதியில் தங்க வைத்து படிக்க வைக்கலாம் சுதன்....." என்றதும் "அதுக்கெல்லாம் அவசியமில்லை, நான் பானுவை பார்த்துக் காெள்வேன்" காேபமாகப் பேச்சை நிறுத்தினான்.

அமைதியாக இருந்த பாக்கியம், பானு சுதனுடன் இருந்தால் ரேகாவை எப்படி பழக வைப்பது, பானுவை வெளியே அனுப்பவும் விரும்ப மாட்டான், எப்படி ரேகா, சுதன் திருமணத்தை நடததி முடிப்பது. நாடியில் கையை வைத்தபடி யாேசித்தாள்.

இனி ஒவ்வாெரு காயையும் சரியாக நகர்த்த வேணும். சுதனாேடு நெருங்கிப் பழகினால் தான் அவன் மனதில் இடம் பிடிக்கலாம். சுவாதி இல்லாத இந்த நேரம் தான் சுதனை மடக்கிறதற்கு சரியான நேரம். தனக்குள் கற்பனை செய்தாள் ரேகா.

"அத்தையும், ரேகாவும் சுவாதி இல்லாத சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஏதாவது செய்யப் பாேகிறார்களே" ஜன்னலாேரமாக நின்று பார்த்தாள் பிரியா.

தாெடரும்.......

எழுதியவர் : றாெஸ்னி அபி (13-Apr-20, 7:27 am)
சேர்த்தது : Roshni Abi
பார்வை : 196

மேலே