கோமியானந்தா
என்னடா நம்ம ஊருக்குப் புதுசா சாமியார் ஒருத்தர் வந்திருக்கிறாராம். அவர் பேரு கோமியானந்தாவாம், அவர் ஒரு திரவத்தைக் கொடுக்கிறாராம். அதைக் குடிச்சா தீராத நோயெல்லாம் தீர்ந்து போகுதாம்,
@@@@@@
ஆச்சரியமா இருக்குதே. எங்கிருந்து வந்தவர் அந்த கோமியானந்தா சாமியார்,
@@@@@@
அவரு அண்டார்டிக்கா பனில பல வருசம் தவம் இருந்தவராம், அவரோட தவ வலிமையால ஒரு மருந்தக் கண்டுபிடிச்சாராம். அந்த மருந்துப் பேரு கோமியாங். அதனாலயே அவரை மக்கள் கோமியானந்தா சாமிகள்னு அழைக்கிறாங்க.
@@@@@
சரி அந்த கோமியாங்கைப் பத்திக் கொஞ்சம் சொல்லுடா.
@@@@@@
கோமியாங் 1௦௦ கிராம் ஐநூறு ரூபாயாம். தினம் வெறும் வயித்தில அஞ்சு நாளைக்குக் குடிச்சா ஆறாவது நாளே எந்த நோயா இருந்தாலும் சரியாகிறாதம். எங்க பக்கத்து வீட்டுத் தாத்தா தான் சொன்னாராம்,
@@@@@@
டேய் எங்க தாத்தா அஞ்சு வருசமா தீராத மூட்டுவலியால வேதனைப்பட்டுட்டு இருக்குறாருடா, அந்த கோமியானந்தா சாமியாரைப் பார்க்க ஏற்பாடு செய்யடா.
@@@@@
நாம நெனைக்கிற நேரத்தில அவரைப் பார்க்கமுடியாது. முன்பதிவு செய்யணும். இப்பப் பதிவு பண்ணினாக்கூட அவரப் பாக்க மூணு மாசம் ஆகும்டா. அங்க போயி மூணு மணி நேரம் வரிசையில காத்திருக்கணுமாம்.
@@@@@@@
அந்த கோமியானந்தா சாமியாரோட இணையதள விவரத்தை கேட்டு வாங்கிட்டு வர்றேன். அப்பறம் பதிவு பண்ணலாம்டா,
@@@@
ரொம்ப நண்றிடா நண்பா.