வண்ணப் பாடல்

வண்ணப் பாடல்.....!!!
*************************
தந்த தனன தந்த தனன
தந்த தனன தந்தனா (அரையடிக்கு)

நெஞ்ச முருகி யன்பு பெருக
நின்று தொழுது கெஞ்சினேன்
நின்ற னடியை யென்ற னிதயம்
நெண்டி வருட வண்டினேன்

தஞ்ச மடைய வந்த வெனது
தங்க மனம டங்குமோ
சந்த மதுகு லுங்க வுனது
தண்டை யொலிசி ணுங்குமோ

கஞ்ச மலரை விஞ்சு மழகு
கண்டு மதிம யங்கினேன்
கண்ட கனவி லுன்றன் வரவு
கண்கள் வழிய வொன்றினேன்

வஞ்சி யமுது தந்த தருணம்
வண்ட மிழினை யுண்டுநான்
வந்த கவிவ னைந்து மகிழ்வில்
மங்கை யுனைவ ணங்குவேன்

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (12-Apr-20, 12:55 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 43

மேலே