இயற்கை நிரந்திரமானது🙏🏽

இயற்கை நிரந்திரமானது.🙏🏽

ஊர் கூடிற்று
சொந்தம் பந்தம் எல்லாம் வந்துவிட்டனர்.
கூட்டை விட்டு பறவை பறக்க நேரமும் குறித்தாகிவிட்டது.
பண்ணிரண்டு ஆண், பெண் என அவர் பெற்றடுத்த மக்கள்
பேர குழந்தைகள்,
அக்கம்,பக்கம்,
என ஊரே அவரை சூழ,
வாடிய முகத்துடன்,
ஒட்டிய வயிற்றுடன்,
வற்றிய தேகத்துடன்,
தொந்நாற்று ஐந்து வயது பெரியவர் அவர் வீட்டின் முன்னே பரந்து விரிந்த மணல் பிறப்பில் தென்னை மர நிழலில் கயிற்று கட்டிலில் படுத்து கொண்டு தன் இறுதி மூச்சுக்காக காத்திருந்தார்.
பெற்ற பிள்ளைகள் பாசம் இயல்பானது.
பேரக்குழந்துகளின் அன்பும் இயற்கையானது.
ஆனால் அந்த ஊர் மக்கள் இவர் மேல் வைத்திருக்கும் மதிப்பும், மறியாதையும் ஆச்சிரியபடுத்தியது.
சாதி அங்கு பார்க்கபடவில்லை
மதம் அங்கு ஆதிக்கம் செலுத்தவில்லை.
கிராமமே ஒன்று கூடி இவர் பிழைக்க பிராத்தனை செய்தார்கள்.
பெரும் செல்வந்தரான இவர்
சாதி பாகுபாடின்றி பழகுவாராம்.
எம்மதமும் சம்மதம் என்ற கொள்கை உடையவராம்.
ஏழை, கல்யாணம் என்று
சொல்லி விட்டால் போதும்,
அத்துனை செலவையும் இவரே செய்வாராம்.
மணபெண்ணுக்கு இரண்டு பவுன் தங்கம் தாணமாக தருவாராம்.
கோயில், மசூதி, தேவாலயம் விசேஷங்களுக்கு இவர் கொடுத்த பொருள் உதவி சொல்லி மாளாதாம்.
இவ்வளவு வயது ஆகியும், இத்தனை வசதி வாய்ப்புகள் இருந்தும், படுக்கையில் நோய்வாய் படும் வரை கழனிக்கு கருக்கல்லே சென்று பணியாட்களுடன் சேர்ந்து இவரும் விவசாயம் வேலை செய்வாராம்.
அந்த ஊர் மாணவன் ஒருவன் நன்றாக படித்தமையால் அவனுக்கு அமெரிக்கா போகும் வாய்ப்பு கிடைக்கவே
இருப்பினும் பணம் அதிக ஆகும் என அவன் பெற்றோர் அந்த எண்ணத்தை கைவிட
இந்த பெரியவர் மிக பெரிய எண்ணம் கொண்டு அந்த மாணவனின் அமெரிக்க பயணத்தின் முழு செலவையும் இவரே ஏற்றார்.
இப்படி விவசாய தொழிலை விஸ்தீரமாக செய்த அவர் கிட்டதட்ட தினமும் முன்னூறு பேருக்கு மேல் வேலை வாய்ப்பு ஏற்படுத்தினார்.
தற்சார்பு கொள்கையை கடைப்பிடித்த அவர் அதை அரசாங்க உதவியுடன் வளரும் விவசாயிக்கும் கற்று தந்தார்.

மகன்கள் எவ்வளவு சொல்லியும் பட்டிண மருத்துவமனைக்கு அவர் வர சம்மதிக்கவில்லை.
வாழ்நாளில் ஒரு வேலை கூட உடம்பு சரியில்லை என அவர் ஆங்கில மருந்தை தொட்டதில்லை.
உள்ள உறுதியான அவருக்கு எப்போதாவது உடல் சுகவீனம் ஏற்பட்டால் அவர் உட்கொள்வது நாட்டு மருந்து தான்.

வைத்தியர் அவர் மூத்த பிள்ளையிடம் அதோ அந்த மரம் ஒரு மூலிகை மரம். அந்த மரத்து வேரை எடுத்து அதை கசாயம் வைத்து கொடுத்தால் இவர் ஒரு வேளை குணமாக வாய்ப்பு உள்ளது.

அந்த பழைமை வாய்ந்த மூலிகை மரத்தை வெட்ட ஆட்கள் கோடாளியுடன் நெருங்க.
அதுவரை அமைதியுடன் மரணத்துடன் போராடிக்கொண்டிருந்த பெரியவர்
"வேண்டாம்....
வேண்டாம்....அந்த மரம் என் அண்ணன். அதை வெட்டாதீர். என் அண்ணன் இதன் கீழே தான் உறங்கி கொண்டுயிருக்கிறார்.
இந்த மரம் என் தந்தையால் நடப்பட்டது.
என் அண்ணன் ஐந்து வயதில் மர்ம காய்ச்சல் காரணமாக இறந்து விட்டார். அவரை இந்த மரத்தில் கிழே என் தந்தை அடக்கம் செய்தாராம்.
இது ஒரு மூலிகை மரம்.
ஆனால் இதன் பெயர் எனக்கு தெரியாது.
இதில் வரும் காற்று மிகவும் சுகமானது.
வைத்தியருக்கே இதன் பெயர் தெரியவில்லை.
எனக்கு எப்படி தெரியும்.
பெயர் முக்கியமில்லை, அந்த மரம் தான் முக்கியம். நூறு வயதுக்கு மேல் வாழும் அந்த மரம் மிக முக்கியம். வைத்தியரே! அந்த மரத்தின் இலை, பூ, காய், கனி இப்படி இதில் ஏதாவது நான் உயிர் பிழைக்க உதவுமென்றால் அதை எடுத்து வந்து என்னை குணப்படுத்த முயற்சி செய்யுங்கள். ஆனால் ஒரு போதும் என் உயிர் காக்க அந்த மரத்தின் உயிரை எடுக்க நான் சம்மதிக்க மாட்டேன்.
பெயியவர் நிறைய பேசியதில் கலைத்து படுத்துவிட்டார்.
தீடிரென கருமேகங்கள் படை சூழ, புழுதி காற்று வீச, மின்னல் கீற்று அவ்வப்போது வந்து போக, இடி இடிக்க , மழை கொட்டியது. சில மணி துளிகள் தான். மழை பெய்தது.
நல்லவர்கள் இந்த மண்ணை விட்டு பிரியும் போது வான மங்கை இருகரம் கொண்டு அழைப்பதின் வரவேற்பு தான் இந்த மழையின் ரகசியமோ.
மண்வாசனை எல்லோரும் அனுபவித்தாலும், நல்லவரின் பிரிவு அனைவர் உள்ளங்களையும் சோகத்தில் ஆழ்தியது.
இந்த மரம், அந்த மலை, ஊர் ஓரம் ஓடும் சிற்றோடை, அவர் ஆசையாய் வளர்த்த பயிர்கள், அவர் அன்றாடம் வளர்த்த கால்நடைகள் எல்லாம் மழை பெய்ததால் இயற்கையாக கண்ணீர் சிந்தியது. மழை பெய்ய இதுவும் ஒரு காரணமோ.
மனிதா, நீ வந்து போகும் வேடதாரி.
உன் வாழ்க்கை நிறந்திரம் அல்ல. இங்கே உனக்கு எதுவும் சொந்தம் அல்ல.
நிச்சயமற்ற வாழ்க்கை வாழும் மானூடா!
இயற்கையுடன் கைகோர்த்து வாழ பழகு. இயற்கை நிரந்திரமானது. இந்த பெரியவர் வாழ்க்கை சொல்லும் பாடம் இது தான்.

- பாலு.

எழுதியவர் : பாலு (16-Apr-20, 6:59 pm)
சேர்த்தது : balu
பார்வை : 262

மேலே