இதுவும் கடந்துப்போகும்

கல்லும் முள்ளும் மேடும் பள்ளமும்
நிறைந்ததுதான் வாழ்க்கைப் பயணம்
அவைகளை கடந்து செல்வது தான் வாழ்க்கை...
கவலைகளையும் சோகங்களையும்
மனக் கஷ்டங்களையும் அவமானங்களையும்
தோல்விகளையும் வீண் பழிகளையும்
நம்பிக்கைத் துரோகங்களையும்
ஏமாற்றங்களையும் பரிகாசங்களையும்
தற்போது கொரோனா கிருமியையும்
கடந்துப்போய் தான் வாழவேண்டும்
இதையெல்லாம் கடந்து போகாமல்
ஒரு வாழ்க்கையை வாழவே முடியாது
தனித்திருப்போம் விழித்திருப்போம் பொருத்திருப்போம்
இதுவும் கடந்துப்போகும்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (16-Apr-20, 5:30 pm)
பார்வை : 892

மேலே