90s காதல்

                            90's காதல் 💞

இவர்கள் கண்ணை பார்ப்பதற்கு உபயோகிப்பதை விட கண்ணால் காதல் கதை பேச உபயோகித்தது தான் அதிகம்...💛💛

காதல் செய்தவனை கல்யாணம் செய்ய காத்து இருப்பதில் சீதையை மிஞ்சி விடுவாள்...🧡🧡

காதலித்த பெண் அருகில் இருந்தாலும் அவளை தொடாமல் நிற்பான் இராவணனை போலவே...❤️❤️

அவளிடம் அவன்  இதயத்தை கொடுத்துவிட்டால் விண்ணைத்தாண்டி வருவாயா ஜெர்சி வந்தாலும் வாடகைக்கு இதயம் இல்லை என்பான்...💚💚

பல மாதங்கள் கழித்து அவள் குடுக்கும் முத்தம் முதலாம் உலக போரை வென்றது போல் இருக்கும்....💙💙

அவள் எழுதிய காதல் கடிதத்தை படிக்கும் போது பல கவிஞர்கள் எழுதிய காவியங்கள் மறந்து போகிவிடும் ....💜💜

வாரத்தில் ஒரு நாள் அண்ணாச்சி கடையில் வரும் தொலைபேசியின் அழைப்பு மணிக்காக வரம் முதல் நாளில் இருந்து காத்து இருப்பான்...🖤🖤

திருவிழாவின் போது திருட்டுத்தனமாக பல கதைகள் பேசும் கைக்கு வளையல் வாங்கி போடுவான்....♥️♥️

யாருக்கும் தெரியாமல் கோவில்பட்டி கோவிலுக்கு கூட்டி சென்று நெற்றியில் பொட்டு வைத்து விடுவான்...💘💘

சாயங்கால வேளையில் மிதிவண்டி எடுத்துகொண்டு அவளை பார்க்க போவேன் அப்பொழுது அவள் வருகையை கண்டு என்னுடன் சேர்ந்து சூரியனும் மறைந்து விடும்....💚💚

மதிய உணவை பகிர்ந்து தருகையில் பாசம் என்னும் முட்டையை அதில் ஒளித்து தருவாள்...🖤🖤

காதலால் கவிதை எழுத தொடங்கிய கவி அரசர்கள் உண்டு ஆனால் அதற்கு காரணமும் அவள் தான் .....

அவளுக்காக ஒரு கவிதை...

அவள் கண்டாங்கி சேலையும் கருநிற மை இட்ட கண்களும் சாயம் தீட்டாத இதழ்களும்
கலர் பூசாத கண்ணகளும் சிறு கருநிற கண்ணாடி பொட்டும் பல கதைகள் பேசும் தோடுகளும் கதகளி ஆடும் கழுத்தும் கார்மேகம் போன்ற கூந்தலும் வழுக்கி கொண்ட போகும் வளைவான இடுப்பும் தாளங்கள் போடும் அவள் கால் கொலுசும் ........... என் காதல் 💙💙

இதைவிட அழகான ஒன்று இருந்தது அது தான் அவள் உடைய  இதயம் அதை  இருட்டு அறைக்குள் எனக்காக பத்திரமாக பூட்டி வைத்து இருந்தாள் பக்கத்து நாட்டு அரசன் பறித்து விடாமல்.....💙💛❤️🖤💚♥️

  காதல் அது எது மீது வேண்டுமானால் வரலாம் காதல் செய் கடைசி வரை காதலால் கல்லறை தேடி செல்லாத நண்பா ....

என் 90's நண்பர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்...

எழுதியவர் : வினோத் குமார் (16-Apr-20, 9:35 pm)
பார்வை : 1324

மேலே