கிரிக்கெட் காதல்
_கிரிக்கெட் காதல்_
பெண்ணே!
நீ வீசிய "பார்வை பந்தில்"
என் "இதயம் கிளீன் போல்ட்"
சிந்தனை ஊரில்
காகித ஆடுகளத்தில்
எழுதுகோல் பேட் பிடித்து
கற்பனை பந்தை அடித்து
ஓரிரு கவிதை ரன்கள் மட்டுமே
எடுத்துக் கொண்டிருந்தேன்....
உன்னைப் பார்த்ததில் இருந்து என்னையும் அறியாமல்
"கவிதை போர்" அடிக்கிறேன்....!
நீ வீசிய இருபதத்தெட்டு நாள்
பார்வை பந்துகளை சந்தித்து
'பிப்டி கவிதை' போட்டுவிட்டேன்...
என்னை சுற்றியிருக்கும்
எதிர்வீட்டு அணி நண்பிகளின்
கீப்பர் என்ற பெண்-என்னை
ஸ்டெம் அவுட் செய்ய முயற்சித்தாள்
ஆனால்
நான் கட்டுப்பாடு என்னும்
கிரிஸ் கோட்டை தாண்டவில்லை....
இன்னும் சில எதிரணி பெண்கள்
கற்பனை பந்துக்களை அடித்து கவிதை ரன்னுக்கு ஓடும்போது
இடையில் - என்னை
சைட் ரன் அவுட் செய்ய முயற்சித்தனர் முடியாமல் தோற்றனர்....
சில சமயம் உன்னை நினைத்து உணர்ச்சிவசப்பட்டு 'கவிதை சிக்ஸர் ' கூட போட்டு விடுகிறேன்......
எந்தப் பெண் வீசிய பார்வை பதிலும்
நான் அவுட் ஆகவில்லை...
அதிலும்
கவிதை ரன் அடித்தேன் ....
நீ வீசிய பார்வை பந்தில் தான்
என் இதயம் கிளீன் போல்ட்டானது...
கவிதை ரசிகன்
🏏💙🏏💜🏏🖤🏏💚🏏🧡🏏