நிலை மறந்தவன்
ஊரடங்கு தளர்த்தப்பட்ட
அதிகாலையிலிருந்தே
வரிசையில் நின்றிருந்தும்,
தன் முறை வருவதற்குள்
இருப்பு தீர்ந்துவிட்டதென
கதவை இழுத்து மூடும்
கடைக்காரனனுடன் வாக்குவாதப்பட்டு
கொலைவெறியோடு திரும்பிப் போகும்போது
முதலில் வாங்கியதை
முழுவதுமாக முடித்துவிட்டு
மேலுமொன்றுக்காக வரிசையில் நிற்கத்
தள்ளாடித் தள்ளாடி செல்லும்
அந்தக் குடிகாரன் மீது வீசும்
சாராய நெடியில் தன்னை மறக்கிறான்
ஆசுவாசம் கொள்கிறான்
பட்டினி கிடக்கும் குடும்ப
நிலை மறந்தவன்
**