அவள்
அவள் வதனம் தாமரை அதரம்
மாதுளைப்பூ கன்னங்கள் மாங்கனி
கண்களோ கயல்கள் இடையோ சீந்தில்
சிரிப்பில் அவள் சிங்காரி என்றெல்லாம்
என்னவள் என் காதலியை வருணித்து நான்
அவள்மேல் கொண்டது அவள் அழகில் மோகம்
வெறும் காமம் என்பதை அறிந்தேன் நான்
அவளோடு பழகியபோது அவள் மனம் அறிந்தபோது
இந்நாள் வரை காமத்தில் மயங்கிய நான் விழித்துக்கொண்டேன்
திசைதெரியாது அலைந்த படகு கலைஞரைவிளக்கம்
கண்டு கரை சேர்ந்தாற்போல் ......பழகியபோது
அவள் உள்ளம் என் மனதை திறந்தது
காமத்தைத் தாண்டி ஒளிரும் அவள் அன்பைக் காட்டியது
அதில் அவள் உரைகளில் தீட்டிப்பார்த்த
தங்கம்போல் ஒளிர்ந்தாள் என்னையும் ஒளிரவிட்டு