மருத்துவ வெண்பா – கொட்டிக் கிழங்கு - பாடல் 59

நேரிசை வெண்பா

கொட்டிக் கிழங்கு குளிர்ச்சியென்பார் தேமலுடன்
ஒட்டிநின்ற மேகம் ஒழிக்குங்காண் – வட்டமுலை
மானே! அகக்கடுப்பும் வந்தவழ லுந்தணிக்குந்
தானே யிதையறிந்து சாற்று. 59

- மருத்துவ குணபாடம்

குணம்:

கொட்டிக் கிழங்கு தேமல், தேகக்கடுப்பு, உட்சூடு ஆகியவைகளை நீக்கும். இதனைக் குளிர்ச்சி என்பர்.

உபயோகிக்கும் முறை:

இக்கிழங்கை நீரில் போட்டு வேக வைத்து மேல் தோலை நீக்கி உண்ணலாம். இதனால் தேக வெப்பம் போகும். இக்கிழங்கை உப்பிட்டு வேக வைத்து மேல் தோலை நீக்கி உலர்த்தி நெய்யில் பொரித்தும் உண்ணலாம். இது நாவிற்கு ருசியையும், தேக ஆரோக்கியத்தையும் உண்டாக்கும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Apr-20, 9:58 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 27

மேலே