காதல்

மலைக்காட்டு தென்றல் அந்தியில்
மெல்ல இறங்கி வந்து புல்வெளியில்
மல்லி மலர்ச்சோலையில் புகுந்தது
மல்லிச்செடியெல்லாம் மகிழ வருடியது தென்றல்
அதுவரைப் பூக்காது மொட்டாய் இருந்த
மல்லி எல்லாம் பூத்து குலுங்க

தென்றலும் மல்லிகைப்பூ மணம் ஏந்தி
அங்கு காதலனுக்கு காத்திருந்த காதலியின்
கூந்தலில் வந்து மோதி போனது
அங்கு வந்த அவள் காதலன் அவளை
தன் காதலி அவளைக் கட்டி அணைத்து
அவள் கூந்தலை கைகளால் கோத
பூச்சூடா அவள் கூந்தலில் மல்லைகையின் வாசம்!'

இது என்ன எங்கிருந்து வருகிறது உந்தன் கூந்தலில்
இந்த மயக்கும் மல்லிகை வாசம் .....என்றான்
ஓ ...... பெண்ணின் கூந்தலுக்கு இயற்கையிலேயே
மணமுண்டா ...... என்று வினவ அவளும் சிரித்தாள்
ஆமாம் எண்பதுபோல் வெற்றி சிரிப்பு அது

இருவரும் அறியார் சற்று முன் அவள் கூந்தலை
முட்டி மோதி வருடிச்சென்ற தென்றல்
விட்டுச்சென்ற பரிசே அது..... அந்த மணம் !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (25-Apr-20, 2:57 pm)
Tanglish : kaadhal
பார்வை : 200

மேலே