முழங்கு சங்கே
முழங்கு சங்கே
***************
முழங்கு சங்கே
__ முளைத்தல் தொடங்க
காலையில் எழுந்து
--மாலையில் மடியும்
பூப்போல வாழாமல்
---புதுவெள்ளியாக தோன்றி
காலங்கள் வரவே
--முழங்கு சங்கே
கவலையில் நனைத்து
__கண்ணீரோடு நடக்கும்
வலியும் வேதனனயும்
__ஆயுளை குறைக்காது
எதிர் திசையில்
__எதிர்நீச்சல் செய்ய
முழங்கு சங்கே
கொரோன தந்த
__பெரும் கண்ணீரும்
எப்போதும் வெப்பம் ஆகாது
குளிர்மையான உள்ளங்களால்
--உறைந்து போகட்டும்
முழங்கு சங்கே
மரணத்தை தழுவும்
---மானிடனின் ஆன்மாவும்
மரணத்தை வெல்லவே
---மாற்றங்கள் தோன்றட்டும்
முழங்கு சங்கே
வண்ண அழகோடு
--மண்ணுலகமும் ஏற்றம் பெறவும்
தன்னிலையை அறியவும்
முழங்கு சங்கே
அகிலன் ராஜா