உலகுக்கு உணர்த்தும்

மரணப்பட்ட விதை
மண்ணில் புதையுண்டதால்
வெகுண்டெழுந்து
வெளியே வர,
கத்தியால் குத்தி
கிழிக்கும் மனிதரைப்போல்
நிலத்தைக் கிழித்து
தலையை நீட்டும்
உயிர் இருப்பதை
உலகுக்கு உணர்த்தும்

எழுதியவர் : கோ. கணபதி. (3-May-20, 6:56 am)
சேர்த்தது : கோ.கணபதி
Tanglish : ulaguku unarththum
பார்வை : 43

மேலே