வானம் எழுதும் வரிகள்

வானம் எழுதும் வரிகள்



அந்த மின்சாரம்
போன மாலை
வேளையில்
எனக்கு
தயக்கமாகத்தான்
இருந்தது கவிதை
எழுத .. ஆனலும்
வானையும்
மேகத்தையும் பார்க்க
வந்து நின்றேன்
வாசலில்..

சற்று நேரத்தில்
நிறம் மாறிய
வானம் எழுத
துவங்கியது
கவிதையை
வரிகள்.. வரிகளாய்..

என் மேலும்
தெறித்தன
வரிகள்..
வீட்டினுள் நுழைந்தேன்
நான்..

இடுக்குகள் வழியாக
சுவர்களில்
அங்கும் இங்குமாய்
பதிந்தன
வரிகள்.. வீட்டினுள்.


ஸ்ரீதரன் வெங்கடகிருஷ்ணன்

எழுதியவர் : ஸ்ரீதரன் வெங்கடகிருஷ்ணன் (2-May-20, 7:50 pm)
சேர்த்தது : Sridharan Venkatakrishnan
பார்வை : 205

மேலே