மாமா குட்டிமா

என் மடியினில் அவள்!
அவள் விழியினில் நான்!
.
.
நான் மிதமாய் தலை கோத..
அவள் இதமாய் இமை மூட..
.
.
தொலைவினில் நிலவும்!
தொடும் அளவினில் நானும்!
.
.
விழி மூடாமல் விழித்திருந்தோம்!
தேவதை அழகை ரசித்திருந்தோம்!
.
.
கண் சிமிட்டும்
அழகு கவிதை அவள்
கண் மூடி உறங்குகிறாள்!
.
.
அவள் உறங்கும் அழகை
உலகிற்கு எடுத்துச் சொல்ல
என் கற்பனை ஊற்றில்
சில வரிகள் கிடைத்தது
உடனே காகிதம் தேடினேன்...
.
.
மெய் மறந்து உறங்கியவள்
திடீரென்று
மெல்லமாய் அழைத்தாள்
"டேய் மாமா"
என்னடா பண்ற தூங்காம?
.
.
பதறி அடித்து நான் திரும்ப
சிதறி அடித்து பறந்தது காகிதம்!
.
.
இல்லாடா குட்டிமா...
நீ தூங்குற அழக பாத்தேன்
ரொம்ப அற்புதமா இருந்துச்சு
டக்குன்னு
ஒரு கவிதை தோனுச்சு
அதான் எழுத காகிதம் தேடினேன்
வழக்கம் போல்
"நீ மாமா" ன்னு சொன்னதும்
கிறங்கிட்டேன் குட்டிமா..
கையில் கிடைத்த காகிதமும்
பறந்து விட்டது என்றேன்...
.
.
நல்லாதா போச்சு..
காகிதம் போனால் என்ன மாமா
என் இதழ்கள் இருக்கிறது "வா மாமா"
உன் வரிகளை அதில்
கிறுக்கி கொள் மாமா
நான் படித்து கொள்கிறேன் என்றாள்..
.
.
தூரத்தில் வேடிக்கை பார்த்த
நிலவை துரத்தி அடித்து விட்டு...
.
விளக்கு வைத்து விழித்திருந்த
விண்மீன்களை எல்லாம்
வீட்டுக்கு அனுப்பி விட்டுட்டு...
.
.
இரண்டு பக்கங்கள் கொண்ட
அவள் இதழினில்
கவிதை எழுத ஆரம்பித்தேன்
முழு இரவும் முழுங்கி விட்டேன்
ஆனால்,
கவிதை எழுதி முடித்தபாடில்லை!!!
.
.
பகல் வந்து பல்லைக்காட்ட
கவிதையை
பாதியோடு நிறுத்திவிட்டேன்!
.
.
பின் கட்டியணைத்த
உறங்க போகும் போது
அவள்
"டேய் மாமா"
மீதி பாதி கவிதையை
இன்றிரவாவது எழுதி முடித்து
விடுவாயா என்றாள்?
.
.
அது குட்டிமா....
.
.
திடீரென்று வேறு குரல்!!!!
.
.
(கோரானா வந்தாலும் வந்துச்சு
இந்த மாடு எரும மாடு மாறி தூங்குது
ஏலே மணி 11 ஆகுதுல
இன்னும் என்னல தூக்கம் கேக்குது
எந்திரிச்சு பல்ல தேய்ல
சாயா ஆருது..
.
.
அம்மாவின் கொஞ்சல் வார்த்தைகள்
காதினில் தேனாய் விழுந்து
கண் விழித்து பார்த்தேன்..
கனவுகள் யாவும் தொலைத்தேன்)
.
.
கவிதைகளின் காதலன்

❤சேக் உதுமான்❤

எழுதியவர் : சேக் உதுமான் (3-May-20, 3:48 pm)
சேர்த்தது : சேக் உதுமான்
பார்வை : 631

மேலே