விழிகள் காட்டும் பாவனை
வியப்பாய்
விரிந்து விழித்த
விழிகள்
நீரால் நிறைந்த
விழிகள்
வலிகள் பல சொல்லும்
நமக்கு
மயங்கி சொருகிய
விழிகள்
மயக்கத்தை நம்மிடம்
காட்டும்
சிவப்பு படர்ந்த
விழிகள்
கோபத்தின் எல்லையை
உணர்த்தும்
கெஞ்சும் பாவனை
விழிகள்
யாசிப்பை நம்மிடம்
கேட்கும்
ஓரத்தில் ஒதுங்கும்
விழிகள்
உரியவை தேடும்
உரிமை
புருவத்தை குவிக்கும்
விழிகள்
எதிர்காலத்தை தேடும்
கோலங்கள்