முடிந்து போனது
உண்ண உணவும், இருக்க இடமும்,
குடிக்க நீரும், உடுக்க ஆடையும்
அனைத்து மக்களுக்கும் கிடைக்க
ஆவண செய்ய வழி தேடும்
அரசியல் கட்சிக்கு தான் எல்லோரும்
ஆசைபட்டார்கள்
தேர்தல் வரும்போதெல்லாம்
சேர்ந்து வந்து தோள் கொடுக்கும்
செல்வம், நேர்மையானவனின்
வெற்றியை பறித்துவிடும்,
முக்கியமான மக்கள் நலன் அதோடு
மரணமுற்று முடிந்து போகும்
இருவேறு கட்சிகள் கூட
அன்றைய அரசியலில்
இணைந்து செயல்பட்டார்கள்
மக்கள் நலனுக்காக—ஆனால்
இன்றைய அரசியலோ மக்கள் நலனே
இல்லாமல் ஆக்கிவிட்டது
இன்றைய அரசியலை முதலீடு
இல்லாம ,லாபம் தரும் தொழிலாக
மாற்றி விட்டார்கள்
அன்றைய அரசியல் மக்கள் நலனில்
அக்கறை காட்டிய நல் அரசியல்,
அது நாட்டின் சுதந்திரத்தோடு
முடிந்து போனது