நிமிர்ந்து வளர்ந்த மரங்கள்

நேரான மரங்கள் தான்
முதலில் வெட்டப்படுமாம்...
எல்லா மரங்களும்
ஒரு நாள் வெட்டப்படும்...
கோணலாய் வளர்ந்து
வெட்டப்படும் போது
அடுப்பிலும்
தொழிற்கூடங்களிலும்
எரித்து சாம்பலாக்கப்படுவதை விட!
நேராய் வளர்ந்து
வெட்டப்படும் போது
அழகிய பொருட்களாய்
எல்லா இடங்களிலிலும்
காலத்திற்கும் பெயர் நிலைக்க
மிளிர்வதே பெருமை...