யாவும் ஒன்றே என் காதலென

வீராப்பாக உரைத்து வந்தேன்
வீரமாக வசனமும் பேசினேன்
வீணடிக்கும் வேலை என்றேன்
விருப்பமிலா காதலை நானும் ...

விழிகளில் விழுந்தவளைக் கண்டேன்
வழிந்திடும் முகத்துடன் நோக்கினேன்
வழியறியா தவிக்கும் நெஞ்சமானேன்
விழுந்தேன் அவளழகில் மயங்கினேன் !

விதித்தேன் இடைக்காலத் தடையும்
விலக்கும் அளித்தேன் காதலிக்கவும்
விரைந்து வழங்கினேன் விண்ணப்பம்
விளங்கவும் செய்தேன் எண்ணத்தை !

வியப்பில் அதிர்ந்தவள் சிலையாகி
விழைவை மறுக்காத நிலையாகி
விந்தையுடன் பாத்தாள் விழியழகி
விழிவழியே தெரிவித்தாள் சம்மதம் !

வளைந்தது நெளிந்தது உடலானது
வழக்கத்திற்கு மாறானது இதயமது !
வரிசையாய் வருகின்ற வார்த்தையும்
வந்திடவும் தயங்கியது தடுமாறியது !

வலம்வந்தது கற்பனைகள் நெஞ்சில்
வலதுசாரியும் இடதுசாரியாய் ஆனது
வரிவடிவமாக மாறியது இதயத்துடிப்பு
யாவும்நீயே என் காதலே என்றது !

விண்ணில் பறந்தது உள்ளமும்
விந்தைகள் நிகழ்ந்தது சிந்தையுள்
வினாக்கள் எழுந்தது என்னுள்
விடைகள் வியப்பில் ஆழ்த்தியது ....

யாவும் ஒன்றே என் காதலென !!!!

பழனி குமார்

( இது கற்பனையே )

எழுதியவர் : பழனி குமார் (7-Jun-20, 6:47 am)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 138

மேலே