பொன்னம்மா

தொண்ணூரு வருஷம் ஆச தீர வாழ்ந்துட்டேன் பொன்னம்மா...

நம்ம வாழ்க்க ஓலக்குடிசையில
விளக்கில்லாத வெளிச்சத்துல
நம்ம நிழல்களோட மணத்துக்குல்ல

உன்ன பொண்ணு பாக்க வந்தேன் பொன்னம்மா...

பூவும் பொட்டும் ஓந்தலையில..
அது ஒரு சொட்டும் இன்னும் மறையில

இளமையில இருந்த மோகம் இப்ப இல்ல..
கிழடு தட்டிய உடம்புக்கு போக ஆச ஏது புள்ள...

மனைவியா நினைச்ச உன்ன இப்ப மகளா நினைக்க தோணுது...
மருவு மச்சம் பார்த்த உன் உடம்புக்கு
மருத்துவம் பாக்க தோணுது...

மதியான செத்த உன் உடம்பு மதமதன்னு எரியுது..
மாத்துதுணி எல்லாம் உன் மாராப்பு போத்த திரியுது...

மக்கிப்போன கிழவனுக்கு உன்ன நினச்சே உயிர் பிரியுது....
-ஜாக்

எழுதியவர் : ஜாக் (7-Jun-20, 7:31 pm)
சேர்த்தது : ஜெ கணேஷ்
பார்வை : 3270

மேலே