சிலநேரம் சேலைகள்
பூக்கள் மலரும்
சிலநேரம்...
புன்னகை உதிர்க்கும்
சிலநேரம்...
வண்ணங்கள் மிளிரும்
சிலநேரம்...
எண்ணங்கள் ஒளிரும்
சிலநேரம்...
காதல் கனியும்
சிலநேரம்...
காமம் பெருகும்
சிலநேரம்...
பருவமெய்த பட்டாகும்
சிலநேரம்...
பருவப்பெண்களின் சொத்தாகும்
சிலநேரம்...
திருமணத்தை அலங்கரிக்கும்
சிலநேரம்...
வளைப்பூட்டில் மினுமினுக்கும்
சிலநேரம்...
தாலாட்டிப் பாடும்
சிலநேரம்...
தாய்ப்பாலூட்ட மறைக்கும்
சிலநேரம்...
தரை விரிப்பாகும்
சிலநேரம்...
குளிர் தடுப்பாகும்
சிலநேரம்...
வெயில் குடையாகும்
சிலநேரம்...
மீன் வலையாகும்
சிலநேரம்...
திருவிழாக்களில் சிரிக்கும்
சிலநேரம்...
தோரணத்தில் நெளியும்
சிலநேரம்...
மானம் காக்க துடிக்கும்
சிலநேரம்...
இல்லையேல், மாட்டித் தொங்கும்
சிலநேரம்...
காலம் மாறிப்போன பின்பும்,
கற்பு நியதி மாறினாலும்,
கலாச்சாரம் போற்ற மறந்ததில்லை...
நம் சேலைகள்...!!!
வேல் முனியசாமி.