வாழ்கையில் சிறந்தது
துன்பமில்லாமல்
வாழும் வாழ்க்கையை விட
யாரையும் துன்புறுத்தாமல்
வாழும் வாழ்க்கைதான் சிறந்தது....
கெட்டுப்போகாமல்
வாழும் வாழ்க்கையை விட
யாரையும் கெடுக்காமல்
வாழும் வாழ்க்கைதான் சிறந்தது
பணத்தோடு
வாழும் வாழ்க்கையை விட
எல்லோரிடமும் பாசத்தோடு
வாழும் வாழ்க்கைதான் சிறந்தது...
ஏமாறாமல்
வாழும் வாழ்க்கை விட
யாரையும் ஏமாற்றாமல்
வாழும் வாழ்க்கைதான் சிறந்தது....
அழாமல்
வாழும் வாழ்க்கையை விட
யாரையும் அழவைக்காமல்
வாழும் வாழ்க்கைதான் சிறந்தது.....
ஆடம்பரத்தோடு
வாழும் வாழ்க்கையை விட
நிம்மதியோடு
வாழும் வாழ்க்கைதான் சிறநதது...
சுகத்தோடு
வாழும் வாழ்க்கை விட
சுற்றத்தோடு
வாழும் வாழ்க்கைதான் சிறந்தது......
கவிதை ரசிகன்