பெண்மையைப் போற்றுவோம்

பிறப்பால் என்றும் உயர்ந்தது பெண்ணினம்,
சிறப்பை யறிந்தே காட்டிடு கண்ணியம்..

பொறுப்பை உணர்ந்தே செயல்படு ஆணினமே,
உறுப்பில் பேதம் காட்டிட வேண்டாமே..

வஞ்சனை மாந்தரை விட்டு விலகியிரு,
பிஞ்சினைக் கூடப் போட்டு நசுக்கிடுவர்..

நஞ்சினைக் கொண்டே அலையும் மனிதர்
நெஞ்சினை யறிந்தே நடப்பாய் விழிப்புடனே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (10-Jun-20, 6:24 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 60

மேலே