பெண்
பெண் சிசுவென நீ பிறந்தாய்
பொறுமையுடன் வளர் என்றது...
பருவம் வந்தாய்
பக்குவதுடன் இரு என்றது...
இளம் பருவம் வந்தாய்
இமை மூடாமல் கவனி என்றது...
வேலை தேடி அழைந்தாய்
பெண்பிள்ளைக்கு வேலை எதற்கு என்றது...
கல்யாணம் முடித்தாய்
கணவனுக்கு பணிய சொன்னது...
அன்னை நிலை வந்தாய்
அனைவரையும் புரிந்து நடக்க சொன்னது..
கிழ பருவம் அடைந்தாய்
கிழவிக்கு வேலை இல்லை என்றது...
ஆண் சமூகத்தில்
பெண் பேதை
நடிகன் வீரன்
நடிகை போதை
ஆண் விதைத்த விதையை
பெண் நினைத்து சுமக்க
வலிகள் முழுவதும் பெண்ணிற்கு
ஆண்டவா ஏன் இந்த படைப்பு?
ஆணை வேலி என்றால்
ஏன்
பெண்ணை பயிராய் படைத்தாய்
பெண்ணை விழுது தாங்கிய ஆலமரம் என்று கூறினால்
பயிர் போல் எளிதில் பறித்திட தோன்றாது
விழுதுகளை விழ்த்திட முடியாது!...
- முத்து துரை