பெண்ணியம்

மீட்ட மறந்த வீணை
பாட மறந்த ராகம்
பேச மறந்த இதழ்கள்
பார்க்க மறந்த விழிகள்

பஞ்சு பொதி மேகங்களோ
பண் பாடவில்லை கொஞ்சிப்
பேசும் பறவைகளோ இங்கு
குரல் எழுப்பி இசை பரப்பவில்லை

நிரோட்டம் கூட நின்றுவிட்டது
போராட்டமே மண்ணில் வென்றுவிட்டது
தாலாட்டும் ஆகாயம்கூட தரைமீது
தடுக்கி வீழ்ந்து விட்டது

தவறாக எடுத்த முடிவுகளால்
தடம் மாறிப்போன சுவடுகளால்
விலை பேச வந்த கயவர்களால்
விலை போகத்துணிந்த பெண்மனம்

இருளான பாதை தான் தெரிகிறது
பொருள் புரியாத வாழ்க்கை இது
எல்லாமே எனக்குப்புரிகிறது
வறுமையை உண்டு உண்டு நன் வாழுகின்றேன்

தவறு செய்யாதவர் யாருமே இல்லைய்யா
கை தூக்கி விடவும் யாருமில்லை
சீ போவென்று சொல்லப்பலர் உண்டு
கண்ணியம் பேசமட்டும் கோடிபேர் உண்டு

தன்னை மறந்து தவறு செய்யவில்லை
என்னை உணர்ந்தே தவறு செய்கிறேன்
பெண்ணியம் பேசும் பெரியோரே
பெண்ணை பெண்ணாக வாழ விடுங்கள்

எழுதியவர் : K. Ranjeni (16-Jun-20, 2:38 pm)
சேர்த்தது : Ranjeni K
Tanglish : penniam
பார்வை : 8677

மேலே