காதல் பித்து

உன் பார்வையில் மயங்கிய என்னை
உன் புன்னகை எழுப்பியது
விழித்துக்கொண்ட நான் உன்னோடு
பேசி பார்க்க அந்த கொஞ்சும் தமிழ்
என்னை உன் அன்பு பிணிப்பில் கட்டிப்போட்டது
உன் மௌனம் இப்போது இது
நீ நடத்தும் காதல் வேள்வி என்று சொன்னது
மௌனத்தின் உன் முகத்தின் தேசு
என் மனக்கட்டை எல்லாம் அவிழ்த்து
உன்னிடம் காதல் சேர்த்தது என் நெஞ்சை
என் இதயத்தாமரை அல்லவோ நீ கண்ணம்மா

எழுதியவர் : வாசவன்=தமிழ்பித்தன்-வாசு (22-Jun-20, 7:49 pm)
Tanglish : kaadhal paithu
பார்வை : 151

மேலே