ஐம்பூதம்

விண்ணுக்கோ நீலமென்றும் ஞாயிருக்கோ வெப்பமென்றும்
காற்றுக் குமேகுளிரென் றும்நீருக் கீரமென்றும்
மண்ணுக்கோ பாரமென் றேயுணர்ந் தால்யாவும்
தாமென் றறியும் இறை.

விளக்கம்: வான் தன்னை நீலம் என்றும் சூரியன் தன்னை வெப்பம் என்றும் காற்று தன்னை குளிரென்றும் நீர் தன்னை ஈரம் என்றும் பூமி தன்னை பாரம் என்றும் இந்த ஐயம்பூதமும் தமை யார் என்று உணர்ந்தால் இறைவனும் இவை அனைத்துமே தாம் என்று உணர்வான் போலும்.

எழுதியவர் : கார்த்திகேயன் திருநாவுக் (26-Jun-20, 2:05 pm)
பார்வை : 35

மேலே