காதல் கதலானது

நீ தான்!
நீயேதான்!!
நான் காதலிக்க மனுச் செய்த
முதல் மானிடப் பெண்,

அஃரினைக்கு ஆயிரம் இருக்கும்;
என் காதல் விண்ணப்பங்கள்
உயர்தினை; உயிர் ஓவியமே!
உனக்காக முதன் முதலில்,

அடியே உன்னை நான் காதலிகிறேன்
அதனால் தான் விலகிநிற்கிறேன்
கண்கள் இல்லதவனுக்கு கூட கனவுகள் பழுதாவதில்லையே

செவிட்டு தாய் பிறசவத்தில்
இசைக் குழந்தை பிறக்குமே
என் க(ா)தல் மட்டும் எப்படிப்
போகுமடி முடங்கிதான்

இன்னும் காதலிக்கிறேன்
உன்னை தான்!
உன்னையே தான்! -மறுத்து விட்டுபோன
உன்னை, மறக்கவிடாத
அஃரினைகளுடன் பயணிக்கையில்
உயர்தினைக்கு ஓர் கடிதம்

எழுதியவர் : பூ பாலச்சூரியன் (2-Jul-20, 4:59 pm)
சேர்த்தது : அப்துல்லாஹ்
பார்வை : 206

மேலே