அவள் பாட்டு
அழகாய் ராகம் ஒன்று சேர்த்து
இசைத்து கொண்டிருந்த சோலைக்குயில்
இசைக்காமல் இருக்க என்னவென்று பார்க்க
வெளியே வந்தேன் அங்கோர் இசைக்குயிலாய்
தன்னை மறந்து பாடிக்கொண்டிருந்தாள் அவள்
மலர்க்கொய்ய வந்த அந்த மாது
ஜுகல்பந்தி பாட தெரியாத அந்த
சோலைக்குயில் மரக்கிளையில்
இன்னும் அசையாது இருந்தது
இசை வரும் திசையைப் பார்த்து